இன்றைய ராசி பலன்(07.01.2025)
மேஷம்:
செய்யும் வேலைகளில் எதிர்ப்பாராத மாற்றம் உருவாகும்.திடீர் வெளியூர் பயணம்,வெளிநாடு பயணம் யோகம் உருவாகும்.கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தோன்றும்.அமைதி காக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
நீண்ட நாட்களாக தொடர்ந்த பணக்கஷ்டம் விலகும்.புதிய வீடு வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
நிதானமும் தெளிவும் தேவை.குழப்பத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள்.உறவினர்கள் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.மூன்றாம் நபர் கொடுக்கும் ஆலோசனை கேட்டு சொந்த விஷயத்தில் முடிவு செய்யாதீர்கள்.
கடகம்:
வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.வெளியூர் பயணத்தில் யோசித்து செயல்படுவது நன்மையாகும்.
சிம்மம்:
இன்று எந்த ஒரு முயற்சிகளும் மாலை வரை எடுக்கவேண்டாம்.இன்று நிதானமாக செயல் பட்டாலே போதும்.பிரச்னைகள் தோன்றும் என்றாலும் அதை சமாளித்து ஆதாயம் காண்பீர்.
கன்னி:
நண்பர்கள் ஒத்துழைப்பால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.தொழிலில் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் வேலைகளை முடிப்பீர்.
துலாம்:
தடைகளை தாண்டி வெற்றி அடைவீர்கள்.உங்களை சுற்றி உள்ள மனிதர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.பெருமாள் வழிபாடு அற்புதமான பலனை கொடுக்கும்.
விருச்சிகம்:
இழுபறியாக இருந்த ஒரு வேலை பெரியோர் ஆதரவுடன் நிறைவேறும். வருமானம் உயரும்.உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு தள்ளிப்போகும்.
தனுசு:
வீட்டில் தேவை இல்லாத பிரச்னைகள் உருவாகும்.பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.இறைவழிபாடு உங்களுக்கு துணை நிற்கும்.பொறுமை காக்க வேண்டிய நாள்.
மகரம்:
தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். மாலைவரை உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். செயல்கள் வெற்றியாகும்.
கும்பம்:
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும்.நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.
மீனம்:
செயல்களில் மகிழ்ச்சி உருவாகும்.நேற்றைய பிரச்னைகள் எல்லாம் ஒரு நல்ல முடிவிற்கு வரும்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.இறைவழிபாடு நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |