ஜூலை 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் டாப் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். அப்படியாக, ஜூலை மாதம் 9 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் நுழைகிறார்.
இதைத் தொடர்ந்து, சனி பகவான் ஜூலை 13 அன்று மீன ராசியில் வக்ரமாக உள்ளார். சூரியன் ஜூலை 16 அன்று மாலை 5:17 மணிக்கு கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 18 அன்று புதன் வக்ரமாக மாறுகிறார்.
இந்த மாற்றங்கள் எல்லாம் 12 ராசிகளுக்கும் பல விதமான மாற்றத்தை கொடுக்க உள்ளது. அதிலும் குறிப்பாக 3 ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் மிக சிறந்த மாதமாக அமைய உள்ளது. சிலருக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்க உள்ளது. மனதில் நம்பிக்கையும் முகத்தில் பொலிவும் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு தொழில் ரீதியாக நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். வெளியூர் பயணங்கள் மிக சிறப்பாக அமைய உள்ளது. கடின உழைப்பால் மிக சிறந்த இடத்திற்கு செல்வீர்கள். வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகள் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த ஜூலை மாதம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் மிகவும் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெற்றிகள் குவியும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |