2026: ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி யோகம்.. ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் யார்?

By Sakthi Raj Jun 12, 2026 07:26 AM GMT
Report

  ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொள்வார்கள். இந்த கிரகம் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்கும். அதிலும் ஒரு சில கிரக பெயர்ச்சியின் பொழுது மிகப்பெரிய அளவில் ராஜயோகம் உருவாகுவதை நாம் பார்க்கலாம். அந்த வகையில், ஜூன் மாதத்தில் கஜகேசரி யோகம் உருவாக இருக்கிறது.

அதாவது, ஜூன் 17ஆம் தேதி சந்திர பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். அவர் தன்னுடைய சொந்த ராசியான கடகத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் கஜகேசரி யோகம் உருவாகிறது கடகத்தில் ஏற்கனவே குரு சுக்கிரன் இருப்பதால் இதனால் ஜூன் 15 முதல் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி யோகம்.. ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் யார்? | June 17 Kajakesari Yogam Bring Luck For 3 Zodiac

நீங்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இது தானாம்

நீங்கள் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இது தானாம்

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் ஆனது மிகவும் சுகமான பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு வாழ்க்கையில் இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகும். நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகும். முதலீடு செய்யும் பொழுது உங்களுக்கு நினைத்ததை விட அதிகமான லாபங்கள் கிடைக்கும். எதிர்பாராத வாடிக்கையாளர்கள் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் ஆனது மிகவும் நேர்மறையான ஆற்றலை கொடுக்கப்போகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்களின் வழியே நல்ல ஆதாயம் கிடைக்கும்.

வேலை செய்யும் இடங்களில் சம்பள உயர்வு பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் உதவியும் செய்வார்கள். நீண்ட காலமாக நினைத்து இருந்த காரியங்கள் உங்களுக்கு கை கூடி வரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக சக்தி வாய்ந்த 5 வெற்றிலை பரிகாரம்

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக சக்தி வாய்ந்த 5 வெற்றிலை பரிகாரம்

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் கஜகேசரி யோகம் ஆனது இவர்களுக்கு நன்மைகளை வழங்கப் போகிறது. வேலையில் முன்னேற்றமும் புதிய பொறுப்புகளும் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்தது போல் சம்பள உயர்வை பெறுவீர்கள். நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட போகிறீர்கள்.

ஒரு சிலருக்கு திருமண வரன் நினைத்தது போல் அமையும். வீடுகளில் சுகாதார நிகழ்ச்சிகள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US