பொங்கல் முடிந்த கையோடு குரு பகவானால் உருவாகும் சிறப்பு ராஜயோகம்- அதிர்ஷ்டம் யாருக்கு
ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மற்றும் குரு ஒரே ராசியில் அல்லது கேந்திர ஸ்தானத்தில் அதாவது 1,4, 7, 10 ஆகிய வீடுகளில் இணையும் பொழுது கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. கிரகங்களை பொறுத்தவரை சந்திரன் தான் ஒருவருடைய மன நிலைக்கு காரணமாக இருக்கக் கூடியவர்.
குருபகவான் ஒருவருக்கு அறிவு, ஞானம், செல்வம், புகழ் போன்ற மங்களகரமான யோகத்தை வழங்க கூடியவர். எனவே இந்த இரண்டு கிரகங்களும் சேரும்பொழுது ஒரு செல்வ செழிப்பான நிலை ஒரு சில ராசிகளுக்கு உருவாகுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு உருவாகக்கூடிய முதல் கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசியினர் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு கஜகேசரி யோகமானது இவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த நன்மைகளை கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய காலகட்டமாகும். அதோடு வாழ்க்கை ரீதியாக சந்தித்த பிரச்சனைகளில் இருந்து இவர்கள் விடுபட போகிறார்கள். பணியிடங்களில் சந்தித்து வந்த மன அழுத்தங்கள் யாவும் விலகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு கஜகேஸ்வரி யோகமானது இவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்பை பெற்று கொடுக்கப்படுகிறது. தொழில் ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றத்தை இவர்கள் அடையப் போகிறார்கள். வியாபாரத்தில் பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் இவர்களுக்கு கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். திருமணம் நடைபெறுவதற்கான யோகங்கள் வரக்கூடிய காலமாகும்.
தனுசு:
தனுசு ராசிக்கு குரு பகவானால் உண்டாகக்கூடிய இந்த கஜகேசரி யோகமானது இவர்களுக்கு குழந்தையின் வழியாக பெயரும், புகழையும் பெற்றுக் கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு உயரக்கூடிய காலகட்டம் ஆகும். வாழ்க்கை துணையுடன் ஒரு நல்ல புரிதல் உருவாகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கக்கூடிய அற்புதமான யோகம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணம் வரன் நினைத்தது போல் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |