பணத்தை பிரசாதமாக தரும் கருப்புசாமி ஆலயம்... தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா ?

By Sakthi Raj Jun 27, 2026 04:54 AM GMT
Report

  இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆலயங்களும் ஒவ்வொரு சிறப்புகளை பெற்றிருக்கிறது. அப்படியாக, நம்முடைய தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ வரம் தரும் மாளிகைப்பாறை கருப்புசாமி கோவில்.

இந்த ஆலயத்தில் சமீபத்தில் நடைபெற்ற இரவு நேர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவின் பொழுது கருப்புசாமி வேடமணிந்து அருள் வந்து ஆடிய பூசாரி ஒருவர் கூர்மையான வாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

பணத்தை பிரசாதமாக தரும் கருப்புசாமி ஆலயம்... தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா ? | Kadalor Sri Varam Tharum Maligaiparai Karupasmy

அப்போது அங்கு திரண்டு வந்த மக்களுக்கு அவர் தன்னுடைய கைகளாலேயே நாணயங்களை அள்ளிப் பிரசாதமாக கொடுத்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம். பிடிகாசு பிரசாதம்: இந்த ஆலயத்தில் இந்த புனித நாணயங்களை பிடிக்காசு என்று அழைக்கிறார்கள்.

அதாவது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடமிருந்து எந்த ஒரு கட்டினமும் காணிக்கையோ பெறப்படுவதில்லை. மாறாக அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையவும், குடும்பம் மன அமைதியோடு இருக்கவும், தீய சக்திகள் இடம் இருந்து பாதுகாப்பு பெறவும் இந்த பிடிக்காசு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

இந்த ராசிகாரர்களுக்கு இந்த மனிதரை பார்த்தாலே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?

இந்த ராசிகாரர்களுக்கு இந்த மனிதரை பார்த்தாலே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?

கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இந்தப்பிடிக்காசை வாங்காமல் அவர்கள் செல்வதில்லை. கருப்பசாமி தன்னுடைய கைகளால் வழங்கும் இந்த பிடிக்காசு தங்களுடைய வாழ்க்கையில் நன்மைகளையும் குடும்பத்திற்கு பாதுகாப்பையும், செல்வ செழிப்பையும் தரக்கூடியதாக நம்புகின்றனர்.

பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று தட்டுகளிலும், துணிகளிலும் இந்த நாணயங்களை பிரசாதமாக பெற்று செல்கிறார்கள்.

இந்த உலகத்தில் பணம் மட்டுமே பிரதானமாக நினைத்து வாழ்கின்ற கூட்டத்தின் இடையே பக்தர்களிடம் பணம் வாங்காமல் அவர்களுக்கு பணத்தை பிரசாதமாக கொடுக்கக்கூடிய இந்த வழக்கம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருவதோடு பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US