தீராத கடன் பிரச்சனை தீர பரிகாரம்
கடன் பிரச்சனை மனிதர்கள் இடத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.அதாவது எவ்வளவு பெரிய வருமானம் வந்தாலும் அந்த வருமானம் கையில் தங்கமால் மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
அதாவது ஆடம்பர செலவுகள் செய்யவில்லை என்றாலும் அவரகளுக்கு கையில் பணம் தங்குவது இல்லை.அப்படியானவர்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது தீராத கடன் பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்து அதில் தீபம் ஏற்றும் திரியை நன்றாக திரித்து விடவேண்டும்.
தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து விட்டு அதில் நெய் ஊற்றி தயார் செய்ய வேண்டும்
இந்த வெட்டிவேர் திரியை வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளையை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
அதன் பின்பு எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வீட்டில் தீபத்தை ஏற்றி வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.
குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, நம்முடைய வேண்டுதலை வைக்கவேண்டும்.
இவ்வாறு வேண்டினால் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும். இதை தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமையில் செய்து வர வீட்டில் நல்லதோர் மாற்றம் கிடைக்கும்.
தீராத கடன் பிரச்சனைக்கு ஒரு முற்றி புள்ளி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |