பண கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 6 முக்கியமான பரிகாரங்கள்
மனிதனுக்கு கட்டாயம் அவன் வாழ்நாளில் ஏதோ ஒரு சூழ்நிலையில் பொருளாதாரத்தில் சில சங்கடங்களை சந்திக்கநேரிடும். அப்பொழுது அவன் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கும்.
வாழ்க்கை மிகவும் கடினமாகவும் மோசமானதாகவும் இருக்கும். அவ்வாறான சுழலில் மனம் துவண்டு போகாமல் முழுமனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
1. காஞ்சிபுரத்தில் அமர்ந்து சகல துன்பங்களையும் தீர்த்து அருள்பாலித்து வருபவள் காமாட்சி அம்மன். இங்கு சென்று அம்மனுக்கு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபட்டால் நம்முடைய பண கஷ்டத்திற்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
2. பண கஷ்டம் விலக காலையில் வீடுகளில் குளித்துவிட்டு சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவ வேண்டும். அதை சிறு பூச்சிகளும் எறும்புகளும் உண்ண தொடங்கும். அவைகள் அதை உண்ண உண்ண நம்முடைய கஷ்டமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நன்மை நடப்பதை பார்க்கமுடியும்.
3. தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தயார் சன்னதிக்கு குங்குமம் வாங்கி கொடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்து வர கடன் சுமை குறையும்.
4. மேலும், நம் வீடுகளில் கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசிகள், சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கி அதை வீடுகளில் வைத்து பயன்படுத்தும் பொழுது அந்த மாவு வீடுகளில் உள்ள வரை நேர்மறை ஆற்றலால் பிரச்சனைகள் குறையும்.
5. மஹாலக்ஷ்மி தயாருக்கு தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மல்லிகை மாலை சாற்றி வழிபட்டால் பண கஷ்டங்கள் விலகும்.
6. மாங்கல்யம் தானம் என்பது சில வகையான ஐஸ்வர்ய தோஷங்களை தீர்க்கும் சக்தி கொண்டது. ஆகவே, தீராத நெருக்கடிகள் மற்றும் பணக்கஷ்டம் விலக மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடு தானம் பெரிதும் துணை புரியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |