எந்த பூக்களை நாம் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது
நாம் பொதுவாக பூஜையின் பொழுது இறைவனுக்கு நம்மால் முடிந்த மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வோம். அவ்வாறு செய்வதால் இறைவனின் மனம் குளிரும் என்பது நம்பிக்கை. அதோடு நமக்கும் மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும். அப்படியாக, நாம் பூஜைக்கு எந்த பூக்களை பயன் படுத்தலாம்? எந்த பூக்களை பயன்படுத்தக்கூடாது என்று பார்ப்போம்.
நாம் ஒரு பொழுதும் பூஜைக்கு வாசனை அற்ற மலர்களையும், உலர்ந்த மலர்களையும் பயன்படுத்தக்கூடாது. அதோடு, வேறு பூ மாலையில் இருந்து பறித்த பூக்களும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.
நாம் எப்பொழுதும் இறைவனுக்கு பூக்களை பறிக்கும் பொழுது காலை வேளையில் பறிப்பது நல்லது. ஒரு பொழுதும் சூரியன் மறையும் நேரத்திலும் அல்லது இரவு நேரத்தில் பூக்களைப் பறிக்கக்கூடாது. இதற்கு பின்னால் ஒரு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.
மாலை நேரம் என்பது தேவதைகள் ஓய்வெடுக்கும் நேரம். அந்த நேரத்தில் நாம் பூக்களை பறிக்கும் பொழுது தேவதைகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம் என்றும் அந்த நேரத்தில் தீய சக்திகளின் நடமாட்டம் இருக்கும் என்பதாலும் நாம் மாலை நேரத்திற்கு மேல் பூக்கள் பறிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், இரவு நேரத்தில் பிரபஞ்ச ஆற்றல் குறைந்து, எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் பறிக்கப்படும் பூக்களும் அந்த சக்திகளால் பாதிக்கப்படலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.
இதை தவிர்த்து பூச்சிகள் கடித்த பூக்கள், அல்லது இதழ்கள் உதிர்ந்த பூக்களைப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் நிலத்தில் விழுந்த பூக்களும் தூய்மையற்றதாக சொல்லப்படுகிறது அதனால் அதையும் பயன்படுத்தக்கூடாது.
ஒருமுறை தெய்வங்களுக்கு அர்ச்சித்த பூக்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. வில்வம் மற்றும் துளசி இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு, இவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |