கால பைரவர் ஜெயந்தி 2025 எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய 3 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
சிவபெருமானின் உக்கிர வடிவமான காலபைரவர் நம்முடைய பயத்தை போக்கி நல்ல வாழ்க்கையை வழங்கக்கூடியவர். அப்படியாக காலபைரவர் அவதரித்த நன்னாளில் நாம் அவரை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற பல்வேறு தடைகள் விலகும் என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கிருஷ்ண பக்ஷ, தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு கால பைரவர் ஜெயந்தி ஆனது நவம்பர் 12ஆம் தேதி என்று கொண்டாடப்படவுள்ளது.
இந்த நாளில் நாம் கால பைரவரை மனதார நினைத்து நம்முடைய வேண்டுதல்களை வைக்க நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மரண பயம், தோல்வி, எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்து விஷயங்களும் விலகுகிறது. அதோடு கால பைரவர் ஜெயந்தி அன்று நாம் முக்கியமான இந்த 3 சக்தி வாய்ந்த பரிகாரங்கள் செய்யும் பொழுது நம் வாழ்க்கை மிக அருமையான நிலைக்கு செல்வதை நாம் காண முடியும்.

பரிகாரங்கள்:
1.காலபைரவர் உடைய வாகனம் நாய் ஆகும். மேலும் நம்முடைய இந்து மதத்தில் நாய்களை கால பைரவர் என்று போற்றி வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் கால பைரவர் ஜெயந்தி அன்று கருப்பு நாய்களுக்கு பால் அல்லது ரொட்டி தானமாக கொடுக்கும் பொழுது கால பைரவரின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் நமக்கும் கிடைக்கும்.
2. அதோடு காலபைரவர் ஜெயந்தி அன்று காலபைரவருக்கு தேங்காய் அல்லது இனிப்புகளை சமர்ப்பித்து நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகுகிறது. கூடுதலாக நாம் கடுகு எண்ணெயில் விளக்கேற்றி வழிபாடு செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் யாவும் விலகும்.

3. மிகவும் முக்கியமாக காலபைரவர் ஜெயந்தி அன்று நாம் காலபைரவர் மந்திரங்கள் பாராயணம் செய்வது நமக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றத்தை கொடுக்கும். அதிலும் குறிப்பாக கால பைரவர் அஷ்டகம் படிப்பது நாம் நினைத்த காரியங்களை அடைவதற்கான சக்தியை நமக்கு அவர் வழங்குகிறார்.
நம்மில் நிறைய நபர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் அல்லது மரணத்தை பற்றிய பயம் வாழ்க்கையை பற்றிய பல்வேறு விதமான பதட்டங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அதாவது ஒரு விஷயத்தை தொடங்கும் முன் அந்த விஷயம் நல்ல முறையில் முடியுமா அல்லது தோல்வியில் முடியுமா என்ற பயம் நமக்கு பெரும் அளவிலான யோசனையை கொடுக்கிறது.
இந்த பயம் விலகுவதற்கு அனைவரும் கட்டாயமாக சரணடைய வேண்டிய ஒரு தெய்வம் என்றால் அது காலபைரவர் மட்டும்தான். காலபைரவரை சரணடையும் பொழுது நமக்கு எதையும் சாதிக்க கூடிய வலிமை கிடைக்கிறது.
அவரை தொடர்ந்து வழிபாடு செய்யும் பொழுது எந்த ஒரு எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் நெருங்காமல் பாதுகாப்பாக இருக்க கூடிய ஆசீர்வாதத்தை அவர் நமக்கு வழங்குகிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |