கால சர்ப்ப தோஷம் வரமா? சாபமா?
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் என்பது மிக முக்கியமான தோஷமாக பார்க்கப்படுகிறது. மேலும் கால சர்ப்ப தோஷம் என்பது ஒருவருடைய ஜாதக கட்டத்தில் ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அனைத்து கிரகங்களும் அமையப்பெற்று இருக்கும். இதில் லக்னமும் உள்ளடங்கிவிடும்.
இவ்வாறான அமைப்புகள் இருந்தால் அவர்களுக்கு கால சர்ப்ப தோஷம் என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த கால சர்ப்ப தோஷம் என்பது மிகவும் தவறாகவே எண்ணப்படுகிறது.
அதாவது காலசர்ப்ப தோஷம் இருந்தால் அந்த ஜாதகருடைய வாழ்க்கையில் மிக கடினமான காலங்களையும் மிக சவால்களையும் சந்திக்க கூடும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருமண வாழ்க்கை மிகக் கடினமாக இருக்கும் என்று ஒரு கருத்துக்கள் உண்டு.
உண்மையில் இந்த கால சர்ப்ப தோஷம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம். அதாவது கால சர்ப்ப தோஷம் ஒரு மனிதனை முன்னேற்றும் பாதையில் அழைத்து செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் தடங்களை தான் அவர்கள் சந்திப்பார்கள், செய்யும் காரியம் தோல்வியில்தான் முடியும்.
ஆனால் அந்த தோல்வியிலிருந்து எழும்பொழுது வெற்றியை கையில் பற்றி கொண்டுதான் எழுவார்கள். அதுவே திருமண வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இந்த கால சர்ப்ப தோஷம் முதல் சில காலகட்டங்களில் சில கசப்புகளை கொடுக்கிறது.
ஏன் சமயங்களில் பிரிவை கூட தம்பதியர் இடையே ஏற்படுத்திவிடும். ஆனால் அது நிரந்தரம் இல்லாத பிரிவாக அவர்களுக்கு அமையும் என்பதுதான் உண்மை.
இந்த கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் நாக தேவதைகள் உடைய அருள் இருக்கும். இவர்களை அறியாமல் நாக தேவதை வழிபாடுகளை மேற்கொள்வார்கள். மேலும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாகர் வழிபாடு செய்வதும் நற்பலனை கொடுக்கும். பெரும்பாலான சாதனை படைத்த மனிதர்கள் ஜாதகத்தில் இந்த கால சர்ப்ப தோஷம் இருப்பதை நாம் கவனிக்கலாம்.
ஆதலால் கால சர்ப்ப தோஷம் உங்களுக்கு இருக்கிறது என்று ஏதேனும் ஜோதிடர் சொன்னால் முதலில் அச்சம் கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை துணிச்சலாக எடுத்துக்கொண்டு போராட முயலுங்கள்.
அது உங்களுடைய வெற்றிப்பாதையை நோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு அற்புத வாய்ப்பாக அமையும். ஆக தோஷத்தை நாம் தோஷமாக பார்ப்பதை காட்டிலும் அதை நமக்கு எவ்வளவு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆன்மீக ரீதியாக நம் சில வழிபாடுகள் கொண்டு மேற்கொள்ள வேண்டும். பக்தியினால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை நாம் தீர்க்கமாக நம்பி விட்டால் எந்த தோஷமும் நம்மை நெருங்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







