சிவன் கோயில் உள்ளே பெருமாள் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
1.அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்
இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஜம்புவனம் என்ற பெயரில் இறைவன் நான்கு யுகங்களுக்கு முன்பே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சுக்கிரன் பகவான் பூஜித்து வணங்கிய லிங்கம் நவக்ரகளுங்கு நடுவே அமைந்து உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டால் சுக்கிர தோஷம் இருந்தால் விலகும் என்பது ஐதீகம்.எம்பெருமானின் ஒரே தோழனான சுந்தரர் அவதரித்த தலம் என்று பல சிறப்புகளை கொண்டது இந்த பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்.
மேலும் இங்கு சுந்தரர் பெருமானுக்கு அவரின் மனைவியரான சங்கிலியார் மற்றும் பரவையாருடன் தனி சன்னதி உள்ளது. மேலும்,இங்கு உள்ள ஈசனை பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் வழிபாடு செய்து இருக்கின்றனர்.
இங்கு உள்ள இறைவனின் திருநாமம் பக்தஜனேஸ்வரர் இறைவியின் திருநாமம் மனோன்மணி.இகோயிலின் உள்ளே பல சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது அவை பிள்ளையார் கோயில், ஆறுமுகத்தோன் கோயில், சண்டேஸ்வரர் கோயில், சுந்தரர் கோயில், மனோன்மனியம்மன் ஆலயம், வரதராசப்பெருமாள் ஆலயம்.
மேலும் பல்வேறு பல்லவர்கால கற்சிலைகளும் பல கடவுளர்களின் சிலைகளும் வெளிப்பக்கத்தில் காணப்படுகிறது.சிவனின் மீது அதிகம் அன்பும் பற்றும் கொண்ட நபர்கள் நிச்சயமா இத்தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிப்பது மிகுந்த நற்பலன்களை தரும்.
இடம்
வழிபாட்டு நேரம்
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
2.அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோயிலூர்
இக்கோயில் தேவார பாடல் பெற்ற தலங்களில் 11 ஆவது தலமாக விளங்குகிறது.ஒருமுறை விளையாட்டாக பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை முடி விட உலகமே இருள் சூழந்து போனது.அந்த வேளையில் இருளே அந்தகாசூரனாக மாறி இறைவனிடம் மோதுகிறது.சிவபெருமானிடம் மோதிய அந்தகாசூரன் தலை கீறி ரத்தம் பூமியில் விழுகிறது.
பூமியில் விழும் ரத்தம் ஆனது ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு அசுரர்களாக மாறி போர் செய்கிறது.அசுரர்கள் ஆட்டம் அதிகம் ஆனதால் பார்வதி தேவி காளியாக மாறி அந்தகாசுரனின் தலையிலிருந்து வரும் ரத்தத்தை கபாலத்தில் பிடித்து அசுரர்கள் உருவாவதை தடுக்கிறாள்.
அந்தகாசூரன் வெளிப்பட்ட ரத்தத்திலிருந்து 64 பைரவர்களையும் 64 பைரவிகளையும் உருவெடுத்து அவர்கள் தேவர்களுக்கு அருள் செய்கிறார்.
மேலும் நாம் சங்க காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பாரிவள்ளல் தனது இரு மகள்கள் அங்கவை,சங்கவை இருவரையும் அவ்வையார், கபிலர் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயிலூர் மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்த தலம் என கூடுதல் சிறப்புக்கள் பெற்றது. மேலும் இததலத்தின் சிறப்பு என்னவென்றால் மனிதர்கள் பல பிறப்புகள் எடுத்துருப்போம்.
அப்படியாக நம்மில் பூர்வ ஜென்ம புண்ணிய பாவங்கள் இந்த ஜென்மத்திலும் தொடரும்.ஆக அந்த பாவங்கள் விலக இங்குள்ள இறைவனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாபங்கள் விலகும் புத்திர, பாவ தோஷங்கள் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
மேலும் திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இடம்
வழிபாட்டு நேரம்
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
3.அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவில்,ஆதி திருவரங்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஆதிதிருவரங்கத்தில் அமைய பெற்று இருக்கும் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இத்திருக்கோயிலின் சுவாமி ரங்கநாத பெருமாள். தாயார் ரங்கவள்ளி தாயார்.
108 வைணவ திருத்தலங்களில் இடம் பெறவில்லை என்றாலும் பெருமாள் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக திகழ்கிறது.ஆதிதிருவரங்கம் மிகவும் பழைமையான் ஊர் ஆகும்.மேலும் இங்கு திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்று பக்தர்கள் சொல்லி பிராத்தனை செய்து வருகின்றனர். இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளாக ஸ்ரீ ரங்கம் பெருமாள் நினைத்திருப்போம்.
ஆனால் அவரையும் விட இங்குள்ள பெருமாள் மிக பெரியவர் அதனால இங்குள்ள சபெருமாள் "பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.
இடம்
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதிதிருவரங்கம் -605802, கள்ளக்குறிச்சி மாவட்டம்
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
4.அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோயிலூர் அமைந்துள்ளது.
இங்குள்ள சுவாமியின் திருநாமம் திரிவிக்ரமன்.அதாவது மிகவும் பிரமாண்டத் திருக்கோலத்தில் வலது காலை உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்று புன்னகையுடன் உலகளந்த பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வேறு எங்கும் கிடையாது என்பது விஷேசம்.
மேலும் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54வது திவ்ய தேசம். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும்.
பொதுவாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு வைத்திருப்பார்.ஆனால் உலகளந்த பெருமாளின் கரங்களில் வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார்.
பக்தர்கள் நல்ல பதவி அடையமேலும் பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச்சிறப்பு. மேலும் இங்கு நேர்த்திகடன்களாக பெருமாளுக்கு வஸ்திரம் மற்றும் துளசி மாலை சாற்றுகின்றனர்.
தாயாருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்கின்றனர்.
இடம்
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |