பக்தர்கள் அலைமோதும் அந்த 3 நாட்கள்.. காமாக்யா கோயிலில் உள்ள ரகசியங்கள்
51 சக்தி நிமிடங்களில் காமாக்யா தேவி மிகவும் முதன்மையானதாக இருக்கிறது. இங்கு யோனி வழிபாடு நடைபெறுகிறது. அதிலும், குறிப்பாக வருடத்திற்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள் கோயில் மூடப்பட்டிருக்கும்.
அந்த நாட்களில் கோயிலை சுற்றி சிகப்பு நிற பட்டு துணியால் மூடப்படும். பிறகு நான்காம் நாள் கோயில் நடை திறக்கப்பட்டதும் அந்த துணியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும், கோயிலுக்கு அருகில் இருக்கக்கூடிய புவனேஸ்வரி கோயில் பிரம்மபுத்திரா நதியை நோக்கிய அமைதியான சூழலை கொண்டிருக்கிறது.

இது ஆழ்நிலை தியானத்திற்கு பக்தர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகவும் இருக்கிறது. காமாக்கியா தரிசனத்திற்கு பிறகு பிரம்ம புத்திரா நதியின் நடுவே அமைந்திருக்க கூடிய உமாநாத் திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் மட்டுமே நம்முடைய ஆன்மீகப் பயணம் முழுமை அடைகிறது என்பது ஐதீகம்.
மேலும், இந்த ஆலயத்திற்கு சென்னை போன்ற இடங்களில் இருந்து செல்வதற்கு விமான பயணம் சிறந்ததாக இருக்கிறது. முன்கூட்டியே ஆன்லைனில் கோயில் தரிசனத்தை பதிவு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
மேலும், நீண்டத்தூர பயணம் என்பதால் போதிய வருமானம் ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்வது நல்லது. அதோடு, இந்த ஆலயத்தை பற்றிய பல்வேறு சிறப்புகளை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |