கவலைகள் தீர காமாட்சி அம்மன் மந்திரம்.., மார்கழி வெள்ளிக்கிழமையில் சொல்லுங்கள்
சக்தியின் உச்ச தெய்வமான ஆதி பராசக்தியின் மிக உயர்ந்த அம்சங்களில் ஒன்று காமாட்சி அம்மன்.
இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் மிகவும் விசேஷமான நாள்.
அன்றைய தினம் கடவுளை நினைத்து பூஜைகள் செய்யும்போது இந்த மந்திரத்தை 27 முறை சொன்னால் வீட்டில் இருக்கும் மனக் கவலைகள், பணக் கவலைகள் தீரும்.
மார்கழியில் வரும் வெள்ளிக்கிழமையன்று காமாட்சி அம்மனையும், மகாலட்சுமையையும் தூய மனதுடன் வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் செய்து வாருங்கள்.
மார்கழி வெள்ளியன்று வீட்டில் உள்ள காமாட்சியமனுக்கு எண்ணெய்க்கு பதில் நெய் விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.
பின் இரண்டு கற்கண்டுகளை எடுத்து பூஜை தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
பின் உங்கள் குல தெய்வத்தையும், காமாட்சியம்மன் மற்றும் மகாலட்சுமையையும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் காமாக்ஷி
தேவ்யை சித்தி தாத்ரே நமஹ !
பின் இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி மனம் உருகி உங்கள் வேண்டுதலை முன் வையுங்கள்.
இப்படி செய்வதால் உங்கள் வீட்டு கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் விலகிவிடும். பணம் வரவு பெருகும். நோய் நொடிகள் தீரும்.
இந்த பூஜையை மார்கழி மாத பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக செய்தால் கூடுதல் பலன் உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |