மணப்பெண்களை அதிக அளவில் பாதிக்கும் கண் திருஷ்டி- அதற்கான பரிகாரங்கள் என்ன?
ஒரு பெண்ணிற்கு அவள் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக அவளின் திருமணம் இருக்கிறது. மேலும், அந்த திருமணத்தின் பொழுது பெண்கள் அதிக முக பொலிவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறாள்.
அதோடு, ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் ஆனப் பிறகு அவள் சுற்றங்கள் மத்தியில் அனைவராலும் கவனிக்கப்படுகிறாள். அப்படியாக, அந்த நேரத்தில் யார் கண் பார்வை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது.
அதனால், சமயங்களில் அவள் மிகுந்த கண் திருஷ்டிக்கு ஆளாகி துன்பப்படும் நிலை உருவாகிறது. அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தான் திருமணம் நிச்சயம் ஆனப்பிறகு மணப்பெண்ணையும் மணமகனையும் மிகவும் பாதுகாப்பாவும் அவர்களுக்கு சரியான முறையில் திருஷ்டி கழிப்பதையும் பின்பற்றுவார்கள்.
அப்படியாக, இவ்வாறான சுபநிகழ்ச்சி நேரங்களில் உண்டாகும் கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுக்காக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, சுபநிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் தான் நாம் அதிக அளவில் கண் திருஷ்டியால் பாதிக்க படுகின்றோம். அவ்வாறு கண் திருஷ்டி நம்மை நெருங்காமல் இருக்க நாம் நவரத்தினக்கல் அணியலாம் என்கிறார்கள். இவை நம்முடைய ஜாதகத்திற்கு ஏற்ப அணிந்து கொள்வது அவசியம் ஆகும்.
அதேப்போல், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெற போகிறது என்றால் நம் வீடுகளில் கட்டாயம் ஹனுமன் சாலிசா அல்லது காயத்ரி மந்திரங்கள் பாராயணம் செய்வது அல்லது ஒலிக்க செய்வது அவசியம் ஆகும். இவை நமக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொடுப்பதோடு நம்மை கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாக்கிறது.
திருமண சமயங்களில் மணப்பெண்கள் கால் அல்லது மணிக்கட்டில் கருப்பு நிற கயிறுகளை அணிந்துகொள்வது அவர்களுக்கு பல வகையில் பாதுகாப்பாக அமைகிறது.
நம் வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும் நேரத்தில் வீடுகளில் கடவுளின் யந்திரங்கள் வைத்து பூஜை செய்யலாம். இவை நம் குடும்பத்தை பல தீய கண் பார்வையில் இருந்தும் தீயசக்தியிடம் இருந்தும் பாதுகாக்கிறது.
அதேப்போல் மணப்பெண், கட்டாயம் கண்ணிற்கு மை வைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு வைப்பது நம் அழகை மேம்படுத்துவதற்கு மட்டும் அல்ல தீய சக்திகளிடம் இருந்தும் நம்மை காப்பாற்ற உதவுகிறது.
சில வீடுகளில் தொடர்ச்சியாக மணப்பெண்ணிற்கு கையளவுகல் உப்பு எடுத்துக்கொண்டு அதை பெண்ணின் தலையை சுற்றி ஆற்றில் அல்லது நெருப்பில் விடுவார்கள். இது அவர்களை பல எதிர்மறை கண்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
வடஇந்தியாவில் திருமணத்திற்கு முன்பாக ஹல்தி சடங்குகள் நடத்தப்படும். இது ஒரு கொண்டாடட்டம் மட்டும் அல்லாமல் மணமக்கள் இருவரையும் புதுப்பிக்கும் ஒரு அற்புத நிகழ்வாகும். காரணம், மஞ்சளுக்கு அனைத்து தீய சக்திகளையும் விலக்க கூடிய சக்திகள் உண்டு.
ஆக, நாம் வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது இவ்வாறான விஷயங்கள் முறையாக பின்பற்றி வர பல தீய கண்களிடம் இருந்தும், எதிர்மறை சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க படுகின்றோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |