கனவில் திருமாங்கல்யம் வந்தால் என்ன பலன்?
நம் வாழ்க்கையில் சில விஷயங்களை தவிர்க்க முடியாதது. அப்படியான ஒன்று தான் நமக்கு வரும் கனவுகள்.
கனவு வருவத்திற்கு அறிவியல் மற்றும் மருத்தவ ரீதியாக நிறைய காரணங்கள் சொல்லி இருந்தாலும்.இந்து மத சாஸ்திர படி நமக்கு வரும் கனவுகளுக்கு சில பலன்கள் இருக்கிறது என்று சொல்கிறது.
அப்படியாக ஒருவருக்கு கனவில் திருமாங்கல்யம் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
திருமாங்கல்யம் என்பது மங்களமான ஒன்று.பெண்களுக்கும் திருமணம் வாழ்வில் மாங்கல்யம் என்பதை மிகவும் புனிதமாக போற்றக்கூடியது.
அப்படியாக ஒருவர் கனவில் மாங்கல்யம் வர அவர்கள் வீட்டில் விஷேசம் நடக்க வாய்ப்புள்ளது.
திருமணம் ஆகாத பெண்ணிற்கோ இல்லை ஆணிற்கோ மாங்கல்யம் கனவில் வர அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
மேலும் ,திருமணம் ஆனவர்களுக்கு மாங்கல்யம் கனவில் வர அவர்களுக்கு நெருங்கியவர்கள் சொந்தங்களில் யாருக்கேனும் திருமணம் நடக்க இருப்பதாய் உணர்த்துவதாகும்.
இப்படியாக ஒருவர் திருமாங்கல்யம் கனவில் பார்க்க அது விஷேசமானது,அப்படி கனவுகள் வரும்பொழுது அருகில் அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு வர நன்மை உண்டாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |