காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலங்கள்
காஞ்சிபுரம் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பட்டு சேலை தான்.பலரும் பல இடங்களில் இருந்து காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை வாங்குவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.அப்படியாக காஞ்சிபுரம் பட்டு சேலை தாண்டி பல கோயிலுகளுக்கு பிரபலம்.
பெரும்பாலான மக்கள் கட்டாயம் பட்டு சேலை வாங்க வந்தால் இக்கோயில்களை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.ஆனால் சிலருக்கு காஞ்சிபுரத்தில் அமைய பெற்று இருக்கும் அற்புதமான கோயில்களின் வரலாறுகளை பற்றி தெரியாமல் தரிசிக்க தவறி விடுகிறார்கள்.
இப்பொழுது காஞ்சிபுரம் சென்றால் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோயில்களை பற்றி பார்ப்போம்
1. ஏகாம்பரேஸ்வரர் கோவில்
காஞ்சிபுரம் கோயில்கள் எடுத்துக்கொண்டால் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதன்மை வகிக்கிறது.10 ஏக்கர் பரப்பளவில் மிகவும் விசாலமான ஏகாம்பரேஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.இது சிவன் கோயிலாகும்.சைவசமயத்தின் முக்கியமான 5 கோயில்களில் இந்த கோயிலும் ஒன்று.
இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.
மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. அதாவது இக்கோயிலை முதலில் 6 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்டு பின்னர் தஞ்சை நாயக்கர்களால் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. பின்பு நாயக்கர்கள் இந்த வளாகத்தில் புகழ்பெற்ற கோபுரத்தை கட்டியுள்ளனர், இது 59 மீட்டர் உயரமுள்ள நுழைவாயில் கோபுரமாகும். மேலும் பஞ்ச பூத தலங்களில் இது முதல் தலமாகும்.
இக்கோயிலில் ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால் 3500 முன்பாக ஒரு மாமரம் இங்கு வைக்கப்பட்டு உள்ளது.இந்த மாமரம் இனிப்பு கசப்பு துவர்ப்பு கார்ப்பு என நான்கு வகை சுவை கொண்ட பழங்களை கொடுப்பது விசேஷமாக கர்த்தப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை,மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரை
இடம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்,பெரிய, காஞ்சிபுரம், தமிழ்நாடு
2. காஞ்சி கைலாசநாதர் கோவில்
காஞ்சிபுரத்தில் பழமையான கோயில்களில் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் ஒன்று.இது ஒரு பழமையான சிவன் கோயில் ஆகிம்.இது பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கட்டிட கலை ஆகும்.
இக்கோயிலில் என்ன விஷேசம் என்றால் நீண்ட நாள் திருமண தடை உள்ள பெண்கள் அம்பாள் சந்தியில் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கொண்டு தங்களுக்கு தாங்களே தாலி கட்டி வேண்டிக்கொள்ளும் சம்பம் நடக்கிறது.
மேலும் திருமணம் தடை பட்ட ஆண்கள் சிவன் சன்னதி எதிரே உள்ளே நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் இக்கோயில் தூண்களில் ராமாயண கதாபாத்திரம் வடிவமைக்க பட்டு உள்ளது.
பௌர்ணமி நாட்களில் இங்கு சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அடைபெறுகிறது.மேலும் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு சரியான முறையில் தர்ப்பணம் செய்யாதவர்கள் இங்குள்ள கடலில் நீராடி ஸ்வாமியை வழிபாடு செய்கின்றனர்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்
கைலாசநாதர் கோயில் சாலை, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்,தமிழ்நாடு 631501
3.அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
இத்தலத்தில் இறைவன் முக்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன்பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்காக இறைவன் நடத்திய தலம் இத்தலமேயாகும்.
சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார். எனவே இவரை வணங்குவோருக்கு ஏராளமான செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் மகா சிவராத்திரியும், மார்கழி மாதம் திவாதிரையும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இத்தலத்தில் சனீஸ்வர பகவானும், சூரிய பகவானும் சிவனை வழிபட்டப்படி இருப்பது சிறப்பாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 7.30 மணி முதல் மதியம் 11.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இடம்
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.
4.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சிபுரம் கோயில்களில் முதன்மை பிரபலமான கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தான்.52 சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும்.ஆனால் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று உள்ளூர் மக்களிடையே அறியப்படுகிறது.
காஞ்சி காமகோடி மடத்தின் புரவலரான ஆதி சங்கரருடன் இந்த புனித தலம் தொடர்புடையதாக புராணங்களும் புராணங்களும் கூறுகின்றன. மேலும் காமாட்சி அம்மனுக்கு முன்னால் அமர்ந்து பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது.இந்த அம்மனை பார்த்தாலே மனதில் உள்ள பாரம் குறையும்.
அத்தனை அழகாய் காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மேலும் காஞ்சி புறத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நோக்கியே அமைய பெற்று இருப்பது சிறப்புடையது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் 8 மணி வரை
இடம்
காமாட்சி அம்மன் சன்னதி தெரு காஞ்சிபுரம்,தமிழ்நாடு 631502
5.வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள் கோயில்களில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் உலகம் எங்கும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களின் ஒரு பகுதியாகும். திவ்ய தேசங்கள் இந்தியாவில் உள்ள புனிதமான மற்றும் மிகவும் புனிதமான வைணவத் தலங்களாகும்.
இந்த இடங்கள் 12 ஆழ்வார்களால் நேரில் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.இக்கோயில் பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் என்ற தீரத்திற்குள் வைத்திருக்கின்றனர்.இவரை 40 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும்.
வரத ராஜா' என்ற சொல்லுக்கு 'வரங்களின் அரசன்' என்று பொருள். இதனால் இறைவன் பெரும் அருளாளராகவே இருக்கிறார். அவர் பக்தர்களுக்கு கல்வியின் சிறப்பையும், செழிப்பையும், குடும்ப நலனையும் வழங்குவார் என நம்பப்படுகிறது.
இறைவனின் சக்தி வாய்ந்த வட்டு ஆயுதமான சுதர்சன ஆழ்வாரை வேண்டிக் கொண்டால் திருமண தடைகள் நீங்கும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றியும், மன அமைதியும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. மக்கள் சந்ததி பாக்கியம் மற்றும் நோய்கள் குணமாக பெருந்தேவி தாயாரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
வழிபாட்டு நேரம்
காலை 8 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
RP9F+PWJ, W மாட தெரு நேத்தாஜி நகர் காஞ்சிபுரம் நாட்டப்பேட்டை,தமிழ்நாடு 631501
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |