6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்..

By Sakthi Raj Nov 14, 2026 09:34 AM GMT
Report

கந்த சஷ்டி விழாவில் இறுதி நாளான சஷ்டி விரதத்தில் முருகப்பெருமான் சூர பத்மனை வென்றதை நினைவு கூறும் வகையில் சூரசம்ஹாரம் நடைபெறும். மகா கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு பல பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த நிகழ்வை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

சூரசம்ஹாரத் தரிசனம்:

சூரசம்ஹார நன்னாளில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று சூரசம்ஹாரம் உற்சவத்தை தரிசிக்கலாம். செல்ல முடியாதவர்கள் வீட்டிலே முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தையும் பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் பலரும் தொலைக்காட்சியில் வாயிலாக, இணைய ஒளிபரப்பு வழியாகவும் சூரசம்ஹாரத்தை நேரடி ஒளிபரப்பை தரிசித்து வரக்கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்.. | Kanda Sashti Fasting Completion Rituals

மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்? யாருடன் கவனமாக இருக்க வேண்டும்?

மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்? யாருடன் கவனமாக இருக்க வேண்டும்?

அதோடு, இந்த நாளில் அமைதியாக அமர்ந்து பகலில் தூங்காமல் வழிபாட்டில் கவனம் செலுத்துவது நமக்கு பல வகையான நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக இருக்கிறது.

விரதம் முடித்த பின் சுத்தம்:

சூரசம்ஹார நிகழ்வு முடிந்த பிறகு பலரும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது உடல் மற்றும் மன சுத்தத்திற்காக விரதத்தின் நிறைவாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு குளிக்கின்ற பொழுது நீரில் துவரம் பருப்பு, மஞ்சள், சந்தனம், உப்பு மற்றும் பன்னீர் சேர்த்து வடிகட்டி தலையில் ஊற்றுவது சில ஆன்மீக மரபுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அவ்வாறு குளிக்கும் பொழுது "ஓம் முருகா, அருள் முருகா, முருகா" என்று மூன்று முறை சொல்லி நீரை தலையில் ஊற்றுவது சிறப்பு. உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை சிறிதளவு தலையில் தெளித்துக் கொள்ளலாம். உடல் நிலைக்கு ஏற்ப விரதம் மற்றும் வழிபாட்டை மேற்கொள்வது முக்கியமானது.

முருகனுக்கு வழிபாடு:

குளித்து முடித்த பிறகு சுத்தமான ஆடை உடுத்தி முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர்கள், பால், பழம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம்.

இந்த நாளில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பதிகங்களை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும். வீடுகளில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்.. | Kanda Sashti Fasting Completion Rituals

12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

விரதம் நிறைவு செய்வது:

சூரசம்ஹாரம் முடிந்த பிறகு ஒரு டம்ளர் பால் குடிப்பது பல பக்தர்களால் விரத நிறைவாகவே கருதப்படுகிறது.

பின்னர் பச்சரிசி சாதம், பால் மற்றும் பழம் போன்ற எளிய உணவுகளை முருகப்பெருமானுக்கு பிரசாதமாக படைத்து அதை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இன்னும் ஒரு சில மரபுகளின்படி மறுநாள் திருக்கல்யாண நாளில் ஆலய வழிபாடு செய்து திருக்கல்யாணத்திற்கு பிறகு கல்யாண விருந்து உண்பதன் வழியாக விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இது ஒவ்வொருவருடைய கோவில் மற்றும் குடும்ப மரபுகளை பொறுத்து மாறுபடலாம். முருகப்பெருமானுடைய சூரசம்ஹார நிகழ்வு என்பது தீமைகள் வென்று நன்மையை காத்த முருகப்பெருமானின் அருளை நினைவு கூறும் நிகழ்வாகவே இருக்கிறது. எனவே விரதத்தை நம்முடைய உடல் நிலைக்கு ஏற்பவும் பக்தியுடனும் நிறைவு செய்வது மிகவும் முக்கியம்.   

பொறுப்புத் துறப்பு:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US