மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்? யாருடன் கவனமாக இருக்க வேண்டும்?

By Sakthi Raj Nov 14, 2026 05:13 AM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கு ஆலோசனை சொல்வதிலும் அறிவுரை சொல்வதிலும் இவர்கள் வல்லவர்களாக திகழக்கூடியவர்கள்.

அந்த வகையில், ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் பொருத்தமானதாகவும் சில நட்சத்திரங்கள் சில கசப்பை கொடுப்பதாகவும் நம்பப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்? யாருடன் கவனமாக இருக்க வேண்டும்? | Pisces Nakshatra Compatibility

12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

மீனம்- பூரட்டாதி நட்சத்திரம்:

மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரம் நல்ல பொருத்தமானதாகவும் இவர்கள் இணைகின்ற பொழுது பொருளாதாரத்தில் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ரோகிணி மற்றும் ஹஸ்த நட்சத்திரங்களை இவர்கள் தவிர்ப்பது நன்மையை கொடுக்கிறது.

உத்திரட்டாதி நட்சத்திரம்:

மீனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மற்றும் கேட்டை நட்சத்திரங்கள் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினு, மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்கள் இவர்களுக்கு பிரச்சனையை தரக்கூடியதாக உள்ளது. கவனமாக இருப்பது அவசியம்.

மீன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்? யாருடன் கவனமாக இருக்க வேண்டும்? | Pisces Nakshatra Compatibility

2026 கந்த சஷ்டி : 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்

2026 கந்த சஷ்டி : 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்

ரேவதி நட்சத்திரம்:

மீனம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி நட்சத்திரம் மிகவும் பொருத்தமான நட்சத்திரமாக இருக்கிறது. இருப்பினும் இவர்கள் திருவாதிரை மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்களுடன் பழகும் பொழுது சற்று கவனமாக இருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியாக, மீன ராசியினருக்கு எந்த நட்சத்திரக்காரர்கள் பலம் மற்றும் பலவீனம் என்று பல்வேறு முக்கியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள். அதைப் பற்றி பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US