கிருஷ்ணரின் அருள் பெற நாம் செய்யவேண்டியவை
கண்ணா என்று சொல்லவே நம் மனம் குழந்தையாகிவிடும். துன்பமோ இன்பமோ பக்தர்கள் மனதில் அவனின் நாமம் ஒலித்து கொண்டே இருக்கும்.
எப்பொழுது ,அவன் நாமம் ஒலிப்பது அவர்கள் நிறுத்துகிறார்களோ அன்று அவர்கள் உயிர் பகவானை சரண் அடைந்து இருக்கும்.
அப்படியாக அவனின் அன்பையும் அருளையும் பெறுவது அத்தனை சாதாரண விஷயம் அன்று.
ஒருவர் கிருஷ்ண பகவானின் கருணை கிடைக்க வேண்டும் எனில், நாம் கீழ்கண்ட பாடலை பாடினால் அவருடைய கருணை அன்பு அனைத்தையும் பெறலாம்.
அருமறை முதல்வனை யாழி மாயனைக்
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத்
திருமக டலைவனைத் தேவ தேவனை
இருபத முளரிக ளிறைஞ்சி யேத்துவாம்.
இந்த பாடலின் விளக்கம் என்னவென்றால்?
எல்லை எதுவென்று அறியமுடியாத வேதங்களால் போற்றப்படும் முதல்வனே!!கடலில் துயில்பவனே,மாயையில் வல்லவனே ,மேக நிறந்தவனே,தாமரைப்போல சிவந்த கண்களை கொண்டவனே மகாலட்சுமியின் மணாளனே தேவர்களின் தலைவனே உன்னுடைய தாமரை பாதங்களை போற்றுகிறோம்.எங்களை ஆட்கொண்டு உந்தன் கருணையும் அன்பையும் கிடைக்க செய்வாயாக என்பது ஆகும்.
அவன் இன்றி எதுவும் இல்லை,அவன் பார்வை நம் மீது இருந்தால் தான் வாழ்வதற்கான அர்த்தம் பிறக்கும்.ஆக கண்ணனை நினைத்து இப்பாடலை பாடி அவன் அருள் கிடைக்க பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |