வியப்பூட்டும் கன்னியாகுமரியின் முக்கிய கோயில்கள்
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் கன்னியாகுமரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும்.
அப்படியாக கன்னியாகுமரியில் கடற்கரை மிக பிரபலம்.மக்கள் பல இடங்களில் இருந்தும் சூரிய அஸ்தமனம் சூரிய உதயம் பார்க்க வருகிறார்கள்.இருந்தாலும் கன்னியாகுமரி சுற்றி பல முக்கிய கோயில்கள் இருக்கிறது.
அதை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.அபப்டியாக கன்னியாகுமாரி சென்றால் நாம் கட்டாயம் பார்த்து ரசித்து தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களை பற்றி பார்ப்போம்.
1. கன்னியாகுமரி கோவில் (குமாரி அம்மன் கோவில்)
கடல் அருகில் மிக அழகாக பார்க்க பார்க்க ரசிக்கும் வகையில் கம்பீரமாக அமைந்து இருக்கும் கோயில் தான் இந்த கன்னியாகுமரி அம்மன் கோயில்.இந்த கோயலிலை பகவதி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்பெறுவர்.
இக்கோயில் உள்ள பகவதி அம்மன் முக்குத்தி பற்றி அறியாதவர் எவரும் இல்லை. இந்தக் கோயிலின் புகழ்பெற்ற கட்டிடக்கலை பாண்டியர்களால் வடிவமைக்கப்பட்டு நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. பார்வதி தேவியின் காதல் மற்றும் சோகமான நம்பிக்கையை நினைவுகூரும் வகையில், இக்கோயில் தேவியின் மறு அவதாரத்தை கன்யா குமாரியாக வழிபடுகிறது.
மேலும் இது ஒரு கலங்கரை விளக்கமாகத் தோன்றினாலும், இது அம்மனின் மூக்குத்தியின் பிரகாசிக்கும் மாணிக்கமாக கூறப்படுகிறது. இந்த ஒளி பல ஆண்டுகளாக பல கப்பல்களை வழிநடத்துகிறது,இதனால் தொலைந்து போன கப்பல்கள் பாறைகளை கரை என்று தவறாக நினைத்து அவற்றில் மோதுகின்றன.
இதனால், கன்னியாகுமரி கோவிலின் கிழக்கு நோக்கிய கதவு ஆண்டு முழுவதும் மூடப்பட்டு, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 4:30 - 12:00 மற்றும் மாலை 4:30 - இரவு 8:00
இடம்
குமரி அம்மன் கோவில், நாகா்கோவிலிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் – கன்னியாகுமரி.
2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஆதி கேசவ பெருமாள் கோயிலும் ஒன்று,அதாவது பெருமாள் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் இந்த கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்யவேண்டும்.அமைதியான ஒரு இடம்.
எந்த சலசலப்பும் இல்லாமல் நம்மை மனம் கவரும் வகையில் கட்டிடம்.மேலும் தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மாட்டும் அல்லாமல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வருகின்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் 1604 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது,அதன் பிறகு 418 ஆண்டு பிறகு 2022ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பத்மநாபரை தரிசனம் செய்யும் முன் இவரை தரிசனம் செய்வது என்று சிறப்பு.
மேலும் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் சயனகோலத்தில் கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார்.இவ்வாறு மேற்கு நோக்கி இருக்கும் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இங்கு வீற்றி இருக்கும் பெருமாளை பார்த்தால் நின்று பார்த்து கொண்டே இருக்கும் போல் அவ்வளவு நிம்மதியாக இருக்கும்.கண்டிப்பாக பெருமாளின் அருளை பெறவும் அந்த இடத்தின் அமைதி சூழலை ரசிக்கவும் நிச்சயம் கன்னியாகுமரி சென்றால் இவரை தரிசித்து வருவது வாழ்க்கையில் பல மாற்றங்களை தரும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை இரவு மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்,627177
3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
திருவட்டாறு சென்றால் கண்டிப்பாக நாம் தொடர்ந்து அடுத்து அடுத்து இரண்டு கோயில்களை தரிசித்து வரமுடியும்.அப்படியான விஷேச கோயில்கள் அங்கு அமைந்து இருக்கிறது.அப்படியாக திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு அடுத்த படியாக மிக புகழ் பெற்ற கோயிலாக திருநந்திக்கரை குகை கோயில் இருக்கிறது.
கிபி 7 ஆம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட புலவர் கால குகை கோயில் ஆகும்.திருநந்திக்கரையில் இரண்டு முக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன. ஒன்று, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் மற்றோன்று திருநந்திக்கரை குகைக் கோயில்.
இக்குடைவரை கோயில் தெற்கு நோக்கிய திருநந்திக்கரை குன்றின் சரிவில் உள்ளது . இது தரை மட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து குகைத்தளத்திற்கு செல்வதற்கு 10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.
இதில் இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வெட்டப்பட்டது. இக்குடைவரைக் குகையில் முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என உள்ளன. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சுதை ஓவியங்கள் பல அழிந்து காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறை அகழப்பட்டுள்ளது. இதில் சிவலிங்கத்தின் பாணம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் நான்கு வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்து குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டு நேரம்
காலை 5:00 - 11:00 மற்றும் மாலை 5:00 - இரவு 8:00
இடம்
97XX+C3V, திருநந்திக்கரை தமிழ்நாடு 629161
4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
நாக தோஷத்திற்கு பரிகார தலமாக இந்த நாகராஜா கோயில் விளங்குகிறது.இங்கு மாதம் தோறும் வரும் கார்த்திகை மிகவும் விஷேசமானது.இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.
இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும். இந்த தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.
வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.
இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை" என்று அழைக்கப்படுகிறாள்.
துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
வழிபாட்டு நேரம்
காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை.
இடம்
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.
5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.சுசீந்திரம் என்று சொன்னாலே நினைவிற்கு வருவது இக்கோயிலாகத்தான் இருக்கும்.தாணுமாலயன் கோவில் ஸ்தாணுமாலயன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இது முற்றிலும் திரிமூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித கோவிலாக கருதப்படுகிறது. சிறந்த கட்டிடக்கலை முக்கியத்துவத்தை மிக முக்கிய சிறப்பம்சத்துடன் சித்தரிக்கும் அழகிய கோயிலும் நான்கு இசைத் தூண்கள் ஒற்றைக் கல்லால் உருவாக்கப்பட்டு அதை மேலும் அற்புதமாக்குகின்றன.
மேலும், இசைத் தூண்கள் கட்டைவிரல் வழியாக அடிக்கும்போது மாறுபட்ட இசைக் குறிப்புகளை உருவாக்குகின்றன. ஏராளமான மக்களை ஈர்க்கும் கோவிலின் தெப்பம் மற்றும் ரதோத்ஸவ கொண்டாட்டத்தை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வழிபாட்டு நேரம்
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம்
N கார் செயின்ட், கன்னியாகுமரி, சுசீந்திரம், தமிழ்நாடு 629704
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |