செவ்வாய்கிழமை சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப,விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.
விளக்கம்
முருகப் பெருமானே, நீ ஆறுவிதமான பண்புகளை உடையவன்; பற்றுக்களிலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுதலை தரும் உயர் ‘நலம்’ (அநுபூதி) பெறுவது பற்றி எனக்கு அறிவுறுத்துவாயாக.” பேரின்ப சொரூபமானவனே! துக்கங்கள் துன்பங்கள் அற்றவன் நீ.
எப்பொழுதும் யோகத்தில் (அ) சகஜ சமாதியிலிருக்கும் ஒரு மகாயோகி நீ. நன்மை பயப்பவன் நீ அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும் நீயே அன்றோ!
அதியற்புதங்களைப் புரியும் லீலா-விநோதன் நீ (நெறி முறை முதல் கூறும் லீலா விதம் -- மூலா நிலமதின், மருவும் அடியார்கள் மனதில் விளையாடு... திருமகள் உலாவும்). ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் பிரமத்தின் சொரூப லட்சணம்.
என்றும் இருப்பது ஸத், எல்லாவற்றையும் அறிவது சித், குறைவற்ற இன்பம் ஆனந்தம். இறைவனின் ஆறு விசேஷ குணங்களான உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, வினோத, ஆகியவை முறையே ஆறு படைவீடுகளையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆறு படைவீடுகளும் நம் ஒவ்வொருவரின் சூட்சும சரீரத்தில் உள்ள ஆறு அதிஷ்டான சக்கரங்களின் அறிகுறி என்றும் கருதப்படுகிறது – ஆதலால், சண்முகப் பெருமான் இந்த ஆறு சக்கரங்களுக்கும் ஈஸ்வரன் ஆகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |