கண் திருஷ்டி செய்வினை நீங்க பாட வேண்டிய சக்தி வாய்ந்த பதிகம்
மனிதனின் முக்கியமான உறுப்பு அவர்களின் கண்கள்.கண்கள் வழியாகத்தான் நம்முடைய உணர்ச்சிகள்,எதிர்ப்புகள் விருப்பு வெறுப்பு என்று அனைத்தும் வெளிப்படும்.அப்படியாக நம்முடைய எண்ணம் தான் பார்வையாக வெளிப்படுகிறது.
அதனால் தான் முன்னோர்கள் கண்ணடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது என்று சொல்லுவார்கள்.அந்த வகையில் ஒரு சிலர் பார்வை மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.அதனால் குறிப்பிட்ட நபருக்கு மிக பெரிய இழப்பு உண்டாக்கும்.
அதில் இருந்து மீள அவர்களுக்கு மிக கடினமாக இருக்கும்.அப்படியானவர்கள் வீட்டில் தொடர்ந்து திருஷ்டி கழிக்க கற்பூரம் ஏற்றுவது போன்ற விஷயங்கள் செய்யவேண்டும்.இன்னும் சிலருக்கு தொடர்ந்து இதை செய்து வந்தாலும் அவர்கள் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.
நாம் இப்பொழது அதற்கான தீர்வை பார்ப்போம். பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் ஒவ்வொரு பிரச்சனைகள் விலக ஒவ்வொரு பதிகங்கள் இருக்கிறது.அதை படிக்க மெதுவாக நம்முடைய துன்பமும் கஷ்டமும் விலகுவதை பார்க்க முடியும்.
அப்படியாக நம்முடைய கண்திருஷ்டி,செய்வினை,பில்லி,சூனியம் விலக நாம் பாட வேண்டிய திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் பாட நமக்கு ஏற்பட்ட கெட்ட நேரமும் விலகும்.
1.நனவிலுங் கனவிலும்
நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்குவந்
தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகந்
தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம்
மடிகள் காண்மினே.
2.வேதியன் விடையுடை
விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ
முனிந்த முக்கணன்
காதியல் குழையினன்
கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ
அல்லல் இல்லையே.
3.மஞ்சுறு பொழில்வளம்
மலி கருக்குடி
நஞ்சுறு திருமிடறுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல்
அரிவை யஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை
யாட லென்கொலோ.
4.ஊனுடைப் பிறவியை
அறுக்க வுன்னுவீர்
கானிடை யாடலான்
பயில் கருக்குடிக்
கோனுயர் கோயிலை
வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல்
வாழ்த்தி வாழ்மினே.
நமக்கு உண்டாகும் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு முதலில் அந்த பிரச்சனை விரைவில் முடியும் என்று மனதார நம்பவேண்டும்.அதோடு இறைவனை முழு மனதோடு சரண் அடைந்து வேண்டுதல் வைக்க நமக்கு நடக்கும் மாற்றங்களை பார்க்கமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |