"காக்கும் பிள்ளையார்" எங்கு இருக்கிறார் தெரியுமா?
நம் அன்றாட வேலைகள் யாவும் நினைத்த மாத்திரம் நடந்து முடிந்துவிடுவது இல்லை.அப்படியே அந்த செயல் தொடங்கினாலும் நிறைய தடைகள் ஏற்படும்.ஒரு காரியம் தடை என்றால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நடக்கும் செயல்கள் எல்லாவற்றிக்கும் மாறி மாறி நடந்தால் அதன் பெயர் தான் காரிய தடை என்போம்.
இந்த காரிய தடை ஏற்பட நிறைய காரணங்கள் சொல்லலாம்.அப்படியாக அதை தகர்த்து நமக்கு அருள் கொடுக்கிறார் மயிலாடுதுறையில் உள்ள கூறைநாட்டில் அமைந்திருக்கும் விநாயகரை.இவரை சங்கடஹர சதுர்த்தியன்று தரிசித்தால் தடைகள் யாவரும் விலகும்.
ஒரு முறை காவிரி ஆற்றில் தென் கரையில் வெள்ளம் ஏற்பட அந்த வெள்ளத்தில் இருந்த தப்பிக்க அந்த பபகுதி மக்கள் இந்த விநாயகரை தரிசித்தனர்.விநாயக பெருமாளும் மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதால் இவரை மக்கள் அன்று முதல் 'காக்கும் பிள்ளையார்' என அழைக்கின்றனர்.
கிழக்கு நோக்கிய கருவறையில் மூன்றடி உயரமாக விநாயகர் கம்பீரமாக காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயிலில் திருமண தடை உள்ளவர்கள் ,பிரகாரத்தில் உள்ள வில்வ மரத்துடன் சேர்த்து சன்னதியை 108 முறை வலம் வந்தால் திருமண யோகம் உண்டாகும்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளன.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தைப்பேறு என வேண்டுதல் நிறைவேற கீழே உள்ள ஸ்லோகத்தை சொல்லியபடி சுற்றுகின்றனர்.
"கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்"
அதாவது யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வணங்கப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாற்றினை விரும்பி உண்பவரே! உமையவளின் மகனே! கவலையைப் போக்குபவரே! விக்னேஸ்வரரே உம் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன் என்று அர்த்தம்.
சமீபத்தில் தான் இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |