கர்ம வினைகள் நீங்க சனிக்கிழமை இந்த நேரத்தில் சிவன் கோயில் செல்லுங்கள்
சிவ பெருமான் என்றாலே கர்ம வினைகளை அழித்து பாவ விமோச்சனம் கொடுப்பவர் ஆவார்.அப்படியாக சிவபெருமானை எல்லோராலும் வழிபாடு செய்து விட முடியும் அவரின் கோயிலுக்கு செல்ல முடியும் ஸ்வாமியை தரிசிக்க முடியும்.
ஆனால் சிவனுக்கே உரித்தான அவனின் அனந்த கண்ணீரை அனுபவிக்க வேண்டும் என்றால் அவன் அருளாலே மட்டுமே சாத்தியம்.அது அவன் ஆட்கொண்டாள் மட்டுமே அவனை பரிபூர்ணமாக உணரமுடியும்.அதை தான் அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்று சொல்லுவார்கள்.
சிவபெருமானை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அப்படியாக சிவன் கோயிலுக்கு செல்ல நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடப்பதை நம்மால் பார்க்க முடியும்.அதிலும் இந்த கிழமையில் இந்த நேரத்தில் சிவனை வழிபட ஒவ்வொரு பலன்கள் கிடைக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி, தைரியம் ஏற்படும்
திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும் .
செவ்வாய் கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும்.
புதன் கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் மற்றும் வேலையில் வளர்ச்சி, உயர் பதவி கிடைக்கும்.
வியாழக்கிழமை இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
சனிக்கிழமை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கர்மவினைகள் கலைந்து விடும்.
மேலும் நம்முடைய மனதால் , எண்ணத்தால் , வாக்கில் கீழ்கண்ட அஷ்ட சிம்மாசன நாமம் சொல்லுவதாலும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம
6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய
நம இவைகளை சொல்ல முடியாவிட்டால் "சிவாய நம" என்று எளிமையான பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
ஓம் சிவாய நம
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |