சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம் வாழ்க்கையில் மாற்ற முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை.அதேபோல் தான் வாஸ்து சாஸ்திரங்களையும் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம்.
உதாரணமாக சிலருக்கு வீட்டில் வாஸ்துபடி நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.சிலருக்கு வீட்டில் கண் திருஷ்டிகள் விழுவதால் நிறைய சங்கடங்கள் உருவாக்கும்.
இதை எல்லாம் நாம் சரி செய்வதற்கு இங்கு இயற்கை மூலமாகவும் ஆன்மீக ரீதியாகவும் நிறைய வழிகள் இருப்பது என்பது உண்மை.
அதை நாம் பின்பற்றினாலே போதும் நம் அனைத்து துன்பங்களும் இருந்தும் விடுபட்டு விடலாம். அப்படியாக கற்பூரம் கிராம்பு ஆகியவை வழிபாட்டில் பயன்படுத்துவது உண்டு.
அதை நாம் வீட்டில் பயன் படுத்துவதாலும் பல விதமான நன்மைகள் உண்டாகும். நம் இரவில் வீட்டில் சனிக்கிழமையில் கிராம்பு மற்றும் கற்பூரம் வைத்து எரிக்க நம் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.[
மேலும் பண கஷ்டங்கள் இருந்தால் அதுவும் விலகி பணவரவு அதிகரிக்கும். நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டுவதற்கு கற்பூரம் கிராம்பு மற்றும் ஏலக்காய் மிக உதவியாக இருக்கும்.
அந்த வகையில் தீய சக்திகளை வீட்டிலிருந்து விலக கற்பூரம் ஐந்து ஏலக்காய் 5 கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து முதலில் பூஜை அறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அமைதி சந்தோஷம் பெருகும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தாலும் நீங்கி வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |