இந்த 3 ராசிகள் மிகப்பெரிய சோதனைகளை சந்திக்கப் போகிறார்களாம்- யார் தெரியுமா?
ஜோதிடத்தில் வருகின்ற அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் கிரகங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளும் சோதனைகளும் வர இருப்பதாக சொல்கிறார்கள்.
வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி அன்று சந்திரன் செவ்வாய் கிரகத்தின் வீட்டிற்குள் நுழைகிறார். இதன் விளைவு மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் சோதனையாக இருக்கப் உள்ளதாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த மாற்றமானது அவர்கள் மனநிலையில் நிறைய குழப்பங்களை கொடுக்கப்போகிறது. அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகத் தெளிவாக எடுக்கக் முடியாத ஒரு நிலை இருக்கும். அதே சமயம் ஒரு சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத குழப்பங்களும் தேவையில்லாத கோபமும் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் வர இருப்பதால் இவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த மாற்றமானது அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கப் போகிறது. இவர்கள் தொழில் ரீதியாக நிறைய ஏற்ற இறக்கங்களை சந்திக்க உள்ளதால் இவர்கள் மன ரீதியாக நிறைய மன அழுத்தங்களை சந்திலலாம். ஆதலால் இந்த காலகட்டங்களில் இவர்கள் தியானம் போன்ற விஷயங்களை செய்வது இவர்களுக்கு தொழில் ரீதியாகவும் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய நன்மையைச் செய்யும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாத ஒரு நிலையை இந்த கிரக நிலையானது உருவாக்க இருக்கிறது. ஆக இவர்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த தன்னம்பிக்கையோடு நண்பர்களிடம் மனம் விட்டு பேசினால் நன்மை உண்டாக்கும். மேலும் மனதிற்கு பிடித்தவர்களிடத்தில் வர்கள் மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வை தேடிக் கொண்டால் இவர்கள் இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |