2026 கார்த்திகை தீபம் : வீட்டில் எத்தனை அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது திருக்கார்த்திகை திருநாள் தான். அப்படியாக, இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
அதிலும், குறிப்பாக திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றக் கூடிய அந்த நிகழ்வு பக்தர்களால் பெரும் அளவு எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ஒன்றாகும்.
அப்படியாக, இன்று 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி திருக்கார்த்திகை தீபம் கொண்டாட உள்ளது. அந்த நிகழ்வுக்காக பக்தர்கள் பெரும் அளவில் காத்திருப்பார்கள். திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
அப்படியாக, இன்று கார்த்திகை தீபத்திருநாள் அன்று எத்தனை அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது?
கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு ஆன்மீக கதை இருக்கிறது. ஒருமுறை பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்கின்ற ஒரு வாக்குவாதம் ஏற்படுவதாக புராணங்கள் சொல்கிறது.
அப்பொழுது அவர்களின் ஆணவத்தை அகற்றுவதற்காக சிவபெருமான் அடிமுடி காண முடியாத பிரம்மாண்டமான ஜோதி வடிவமாக தோன்றினார். அந்த ஜோதியின் அடியை காண திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்ட செல்கிறார்.
முடிவைக் காண பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து வானத்தை நோக்கி பறக்கிறார். ஆனால், இருவராலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் பார்க்க முடியவில்லை. சிவபெருமானே முழு முதல் கடவுள் என்பதை இருவரும் உணர்ந்ததாக புராணங்கள் சொல்கிறது.
அந்த சிவபெருமானின் ஜோதி வடிவத்தை நினைவு கூறும் வகையில் தான் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதன் அடையாளமாகவே திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திற்கு எத்தனை அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபத் திருநாள் அன்று வீடுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. அவரவர் குடும்ப வசதிகளுக்கு ஏற்பவும், உடல் நல வசதிகளுக்கு ஏற்பவும் விளக்குகளை ஏற்றுக் கொள்ளலாம்.
இருப்பினும் ஆன்மீக ரீதியாகவும் பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்ற படக்கூடிய வழக்கம் பின்பற்றப்படுகிறது.

5 அகல் விளக்குகள்:
ஐந்து என்கின்ற எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றலாம். இது பஞ்சபூதங்களை குறிக்கக்கூடியதாக இருக்கிறது.
9 அகல் விளக்குகள்:
நவகிரகங்களின் அருளை பெறுவதற்கு ஒன்பது கிரகங்கள் என்ற எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றலாம்.
27 அகல் விளக்குகள்:
27 நட்சத்திரங்கள் என்கின்ற எண்ணிக்கையிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
108 அகல் விளக்குகள்:
108 என்பது ஆன்மீக வழிபாடுகளில் சிறப்பான எண்ணிக்கையாக இருக்கிறது. பக்தர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப 108 விளக்குகளையும் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
வீட்டின் வாசலில் விளக்குகள்:
வீட்டு வாசல் நிலைப்படி பால்கனி முற்றம் மற்றும் பூஜை அறையாகிய இடங்களிலும் வரிசையாக அகல் விளக்குகளை ஏற்றலாம். முக்கியமாக 5,9, 108 என்ற எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றுவது சிறப்பு என்றாலும் எத்தனை விளக்குகள் ஏற்றினாலும் மனத் தூய்மையோடு பக்தியோடும் ஏற்றுவது அவசியம்.
அதோடு, அதிக எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றினால் தான் நமக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்பது இல்லை.
எந்தத் திசையில் அகல் விளக்குகள் ஏற்றினால் சிறப்பு?
கிழக்கு - கிழக்கு திசையில் விளக்கேற்றும் பொழுது புகழ், நற்பலன்கள், இறையருள் கிடைக்கிறது.
மேற்கு - மேற்கு திசையில் விளக்கேற்றும் பொழுது கடன் மற்றும் தடைகள் யாவும் நீங்குகிறது.
வடக்கு - வடக்கு திசையில் ஏற்றுகின்ற பொழுது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
தெற்கு - முன்னோர்களை நினைவு கூறும் வகையில் தெற்கு திசையில் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
பொதுவாக, வீட்டு பூஜை அறையில் மற்றும் வாசலில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி விளக்கு ஏற்றுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வடக்கு திசையிலும் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
Disclaimer:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |