செல்வ வளம் அருளும் கார்த்திகை மாதம் குபேர வழிபாடு

By Sakthi Raj Nov 19, 2024 05:27 AM GMT
Report

கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதம் மட்டும் அல்லாமல் பல ஆன்மீக வழிபாடு நிறைந்த மாதம்.இந்த மாதத்தில் தான் மகர ஜோதி தீபம் மற்றும் ஐயப்ப வழிபாடு மிக சிறப்பாக நடக்கும்.இவ்வளவு விசேஷம் நிறைந்த மாதத்தில் நம்முடைய பண கஷ்டம் தீர நாம் லட்சுமி குபேர வழிபாடு செய்யவும் மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் அவசியம்.பணம் இருந்தால் மட்டுமே அன்றாட வாழ்க்கையும் நடத்த முடியும்.அப்படியாக பலருக்கும் என்னதான் உழைத்தாலும் பண கஷ்டம் உண்டாகும்.அந்த வேளையில் அவர்கள் வாழ்க்கையின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து காணப்படுவார்கள்.

செல்வ வளம் அருளும் கார்த்திகை மாதம் குபேர வழிபாடு | Karthigai Matham Kubera Valipadu

அப்படியாக அவர்கள் மனம் தளர்ந்து போகாமல் இறைவழிபாடு செய்வது தான் அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த பாதை வழிவகுக்கும். அப்படியாக பண கஷ்டம் ஏற்படாமல் இருக்க லட்சுமி குபேர பரிகாரங்கள் செய்வது சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.

அந்த பரிகாரங்களில் ஒன்றாக தான் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரமும் திகழ்கிறது. இந்த பரிகாரத்தை கார்த்திகை மாதம் முடிவதற்குள் ஒரு நாளில் செய்வது சிறந்த பலனை தரும். இதற்கு நமக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் இருந்தால் போதும்.

தீப ஆராதனையின்போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

தீப ஆராதனையின்போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

மேலும் இதனுடன் ஏதாவது ஒரு சில்லறை நாணயத்தை வைக்க வேண்டும். மகாலட்சுமி வீற்றிருக்கக்கூடிய 108 பொருட்களுள் வெந்தயமும் ஒன்று. பலரும் தங்களுடைய சேமிப்பு பணத்தை அன்றைய காலத்தில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய வெந்தயத்தில் வைத்திருந்தார்கள் என்றும் அவ்வாறு வைக்கும் பொழுது அவர்களுக்கு பணவரவு அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த பரிகாரம் மேற்கொள்ள மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் அதற்கு முன்பாக ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை பரப்பிக் கொள்ளவேண்டும்.

செல்வ வளம் அருளும் கார்த்திகை மாதம் குபேர வழிபாடு | Karthigai Matham Kubera Valipadu

அதற்கு மேல் தங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை தொடங்கி குலதெய்வம் மற்றும் கடைசியில் லட்சுமி குபேரரை மனதார வழிபாடு செய்யவேண்டும்.

பிறகு இரவு 8:00 மணி வரை இது அப்படியே பூஜை அறையிலேயே இருக்க வேண்டும்.எட்டு மணிக்கு மேல் வெள்ளை, பச்சை, மஞ்சள் இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் ஒரு துணியை எடுத்து அதில் இந்த வெந்தயம் மற்றும் நாணயத்தை போட்டு மூட்டையாக கட்டி எந்த இடத்தில் நீங்கள் பணம் வைத்து எடுத்து செலவு செய்கிறீர்களோ அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது லட்சுமி குபேரரின் அருள் கிடைத்துபண தட்டுப்பாடு ஏற்படாமல் சேமிப்பு அதிகரிக்கும். மேலும் மறவாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த மூட்டைக்கும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் .

மார்கழி ஒன்றாம் தேதி இந்த மூட்டையை எடுத்து அதில் இருக்ககக்கூடிய ஒரு ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு வெந்தயத்தை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இதை முழுமனதோடு செய்ய நிச்சயம் வீட்டில் நல்லதோர் மாற்றம் தெரியும் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US