களைகட்டிய திருவிழா: 150 ஆண்டுகளாக வினோத பழக்கம்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உச்சி கருப்பணசாமி கோயில் திருவிழா விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
மதுரையின் திருநகர் பகுதியில் அமைந்துள்ளது உச்சி கருப்பணசாமி கோயில், ஒரு சிறிய பாறை மீது சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.
இக்கோயிலின் வினோதம் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள், சுமார் 150 ஆண்டுகளாக இந்த பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது, தொடர்ந்து கோயிலுக்கு வரும் ஆண்களுக்கு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுகிறதாம்.
அதையும் அங்கேயே சாப்பிட வேண்டும், வெளியே எடுத்துச் செல்லக்கூடாது, கோயிலின் திருநீரை கூட வெளியே எடுத்து செல்லக்கூடாதாம்.
அந்த வகையில் நேற்று ஆண்கள் மட்டுமே பங்கேற்க உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா நடந்து முடிந்தது.