போருக்கு செல்லும் முன் கட்டபொம்மன் வணங்கிய விநாயகர் பற்றி தெரியுமா?
கட்டபொம்மன் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அவரின் வசனம் மக்கள் மத்தியில் இன்னும் பேசக்கூடிய வீரமான வசனம்.அப்படியாக அந்த கட்டபொம்மன் வழக்கமாக ஒரு விநாயகரை வழிபட்டு கொண்டு இருந்திருக்கிறார்.
அதாவது அவர் தனது போருக்கு சொல்லும் முன் இந்த விநாயகரை மறவாமல் வணங்கி ஆசி பெற்று செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
தேவகோட்டையில் கலங்காத விநாயகர் என்ற பெயரில் விநாயக பெருமான்.அருள் பாலித்து வருகிறார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.
முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுஇருபவர்கள்அந்த வழக்கில் வெற்றிபெற விரும்புபவரும் இவ்விநாயகரைத் தரிசனம் செய்ய அந்த வழக்கில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
இந்த கலங்காத விநாயகர் தரிசனம் செய்பவர்கள் வாழ்க்கையில் கலங்கி போவது இல்லை என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |