ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறும் விநாயகரின் அதிசய கோயில்
கோயில்கள் எடுத்து கொண்டால் ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு அதிசயம் வரலாறும் நிறைந்து இருக்கும்.அப்படியாக விநாயகரின் அதிசயம் என்று பெயர் கொண்ட விநாயகரின் அதிசய கோயில் நம்மை வியப்படைய செய்கிறது அதை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்னும் ஊரில் தான் இந்த விநாயகரின் அதிசய கோயில் அமைய பெற்று இருக்கிறது.விநாயகர் என்று எடுத்து கொண்டால் அவர் தடைகளை தகர்த்து அருள்புரிவார்.
அப்படியாக இந்த அதிசய கோயிலின் விநாயகர் நம்முடைய வாழ்க்கையின் எல்லா இன்னல்களையும் தகர்த்து வாழ்க்கையில் அதிசயம் நடக்க செய்கிறார்.
இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்ல படுகிறது.இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று கூறப்படுகிறது. இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இக்கோயிலின் அதிசயமும் சிறப்பும் என்னவென்றால் இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் என்று கூறப்படுகிறது.
உத்தராயண காலத்தில் (மார்ச் - ஜூன்) விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில் (ஜூலை - பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும். அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர் பெற்றது.
இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர் கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர் வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.
இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும் இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில் உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும். இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.
இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கோயிலில் கூடுவர்.
எனவே,நாமும் இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும் இக்கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று அதிசய விநாயகரின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |