கேது பெயர்ச்சி 2025: மிகவும் கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் அவரை புரிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவர். அவர் தனது ராசியை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக, கேது பகவான் மே 18, 2025 அன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு, சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அதனால் அந்த மூன்று ராசிகளும் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு, கேதுவின் சிம்ம ராசி பயணம் அவர்களுக்கு அவ்வளவு சாதகமான சூழலில் இல்லை. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதீத மன அழுத்தத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வியாபாரம் செய்யும் இடத்தில் பொருளாதார ரீதியாக இவர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சிம்மம்:
கேது சிம்ம ராசியில் மட்டுமே சஞ்சரிக்கிறார். அதனால் இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினர் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எந்த முடிவுகளையும் எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு, கேது சிம்ம ராசியில் நுழைவதால் சில எதிர்பாராத இழப்புகள் உண்டாகலாம். பணியிடங்களில் சில தடுமாற்றம் உண்டாகும். தம்பதிகள் இடையே பிரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மிக மிக கவனமாக இருப்பது நன்மை கொடுக்கும். பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |