சிம்ம ராசியில் இணையும் புதன் கேது- வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை பெரும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் தங்களுடைய நிலையை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மேலும் கிரகங்களின் இந்த மாறுதல்கள் 12 ராசிகளுக்கும் அசுப மற்றும் சுபயோகங்கள் உண்டாக்குகிறது. அந்த வகையில் நிழல் கிரகமாக இருக்கும் கேது பகவான் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்பு பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று புதன் கிரகமும் சிம்ம ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பின் நிகழ இருப்பதால் இது ஒரு அரிய வகை சேர்க்கையாக கருதப்படுகிறது. இந்த அற்புத நிகழ்வால் ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அதிர்ஷ்டமும் திரும்பமும் காத்திருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசிக்கு இந்த மாற்றம் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு தொழிலில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகி முன்னேற்றம் அடைவார்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வரன் அமையும். பூர்வீக சொத்து வழி உண்டான பிரச்சனைகளும் வழக்குகளும் இவர்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு பொன் பொருள் வாங்க யோகம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த சேர்க்கை அவர்கள் வாழ்க்கையில் நல்ல தெளிவையும் வாழ்க்கையில் முன்னோக்கிய பயணத்தை செய்யக்கூடிய நல்ல நிலையும் கொடுக்க உள்ளது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் சென்று வேலை பார்க்கும் நிலை உருவாகலாம். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
தனுசு:
தனுசு ராசிக்கு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இவர்கள் குடும்ப சூழ்நிலையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கையில் அக்கறை செலுத்துவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உருவாகும். ஒரு சிலருக்கு வங்கி சேமிப்புகள் நல்ல நிலையில் உயரும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







