பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது
ஒரு மனிதன் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் தவம் இருக்கலாம், புண்ணியம் செய்திருக்கலாம். ஆனால், ஒரு நொடி ஆணவம் கூட அவனை மிகப்பெரிய அழிவிற்கு தள்ளிவிடும். அதைப்பற்றி நாம் பார்ப்போம். மகாபாரதத்தில் அரசன் யயாதி தொடர்பான ஒரு குறிப்பிட்ட நிகழ்வு இருக்கிறது.
அதில் தேவேந்திரனின் ஒரு கேள்வி யயாதியின் ஆழ்மனதில் மறைந்து இருக்கக்கூடிய ஆணவத்தை வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிட்டது. அப்படியாக, தேவேந்திரன் கேட்ட கேள்வி என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

அரசன் யயாதி நீண்ட காலமாக தவமும் அற செயல்களும் செய்து வந்தான். அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தை எல்லாம் துறந்து காட்டு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு கடுமையான தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய தவ வலிமையாலும் ஈட்டிய புண்ணியத்தாலும் அவன் சொர்க்கத்தில் ஒரு இடத்தையும் பெற்றான்.
ஒருநாள் தேவேந்திரன் அவனிடம் கேட்கிறான்!.. நகுஷனின் மகன் யயாதித்தியே நீ! பெருந்தவம் செய்திருக்கிறாய். சரி இப்பொழுது சொல் தவத்தின் அடிப்படையில் உனக்கு நிகரானவர் என்று நீ யாரை கருதுகிறாய்? என்று ஒரு கேள்வி கேட்கிறார். கேள்வி மிகவும் எளிமையானதாக தான் தெரியும். அதற்கான பதில் எல்லாவற்றையும் மாற்றி விட்டது.
யயாதியின் வார்த்தைகள் ஆணவம் உச்சம் தொட்டு இருந்தது. யயாதி சொல்கிறார்.. தேவர்கள் மனிதர்கள், கந்தர்வர்கள் முனிவர்கள் என்ன யாரிலும் தவத்தில் எனக்கு நிகரான ஒருவரை நான் இதுவரையிலும் பார்க்கவில்லை. என் தவத்தில் எனக்கு ஈடு இணையே இல்லை என்கிறார். அவர் தன் தவத்தின் மீது கொண்ட பெருமையால் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவராக கருதத் தொடங்கி விட்டார்.

அவன் பதிலில் மறைந்திருந்த ஆணவத்தை இந்திரன் நன்றாக உணர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறினார், அரசனே உனக்கு நிகரானவர்கள் உன்னை விட உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களின் உண்மையான மதிப்பை நீ உணராமல் இகழ்ந்து விட்டாய். இவ்வளவு தாழ்வாக பிறரை கருதியதால் உன்னுடைய புண்ணியம் கரைந்து விட்டது.
ஆதலால், சொர்க்கத்தில் உனக்கான காலம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார். அந்த பதில் யயாதி ஒருபொழுதும் கற்பனை செய்யாத ஒன்று. சொர்கத்தில் இருந்து யயாதி வீழ்ச்சி தொடங்குகிறது. கௌரவத்துடனும் சிறப்போடும் வாழ்ந்து வந்த அந்த சொர்க்கத்திலிருந்து அவன் கீழே விழ தொடங்கினான்.
இருப்பினும் கீழே விழும் பொழுது அவன் ஒரு விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்தினார். தேவேந்திரனிடம் யயாதி என்ன சொல்கிறார் என்றால், பிறரை அவமதித்ததால் நல்ல செயலால் ஈட்டிய சொர்க்க வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றால் சொர்க்கத்தில் இருந்து நான் கீழே விழும் பொழுது நான் அறநெறி தவறாத சான்றோர்கள் மற்றும் நல் ஒழுக்கம் உடையவர்களின் மத்தியில் வீழ விரும்புகிறேன் என்று வேண்டிக் கொண்டான்.
அந்த விருப்பத்தை ஏற்றுக் கொண்ட தேவேந்திரன் கூறினார், மன்னரே நீர் நல்லொழுக்கமிக்கவர்களின் அருகிலேயே விழுவீர். அங்கு நீ இழந்த பெருமையை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், இனிவரும் காலங்களில் உமக்கு இணையானவர்களையோ அல்லது உன்னதமானவர்களையோ ஒருபோதும் அவமதித்து விடாதீர் என்று சொல்கிறார்.

இவ்வாறு யயாதி சொர்க்கத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தார். அவருடைய ஒளி வீசும் தோற்றம் மிகவும் அபூர்வமாக இருந்ததால். கீழே இருந்த ராஜ ரிஷிகளும் முனிவர்களும் அவரைப் பார்த்து வியந்தனர். பிறகு மிகுந்த வியப்புடன் கேட்கிறார்கள், நீ யார்? உமது ஒளி சூரியனுக்கும் நெருப்புக்கும் இணையானதாக இருக்கிறதே. உன்னுடைய தோற்றம் தேவேந்திரனை போலவே கம்பீரமாக இருக்கிறதே.
ஏன் நீ வானத்திலிருந்து கீழே விழுகிறார் என்று கேட்கிறார்கள். அப்பொழுது யயாதி முழு வரலாறையும் கூறுகிறார். முனிவர்களின் மத்தியில் ஒரு புதிய புகலிடம் கிடைக்கிறது. யயாதி கண்ட அஷ்டகரும் மற்ற முனிவர்களும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும், சொர்க்கத்து சிறப்பை இழப்பது என்பது வாழ்க்கையின் எப்பொழுதும் ஒரு முடிவு அல்ல என்றும் சொல்கிறார்கள்.
மேலும் முனிவர்களின் சவகாசம் என்பதே ஒரு சிறந்த புகழ் இடமாகும். சொர்க்கத்திலிருந்து கீழே விழுவதற்கு ஆணவம் காரணமாக இருந்தாலும் இறுதியில் அது அவருக்கு ஒரு ஆழமான ஆன்மீக பாடமாக மாறியது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அகந்தை தீயது மட்டுமல்ல நமக்கு வீழ்ச்சிகள் கொடுத்து விடும்.
ஆன்மீக பயிற்சி ஒரு மனிதனை பணிவு உள்ளவனாக மாற்றும். எப்பொழுதும் அறிவு நம்மை எப்பொழுது பிறரை தாழ்வாக பார்க்க தூண்டுகிறதோ, செல்வம் நம்மை எப்பொழுதும் பிறரை விட உயர்ந்தவர்களாக உணர செய்கின்றதோ, வெற்றி நம்முடைய செயல்களை குறித்து நமக்கு பெரிய ஆணவம் கொண்டு வருகிறதோ அதுவே நமக்கு வாழ்க்கையில் தொடங்குகின்ற வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது. பணிவோடு வாழ்வதே எப்பொழுதும் காப்பாற்றும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |