லக்னாதிபதி அல்லது குருவை கோச்சார சனி பார்த்தால் பதவி உயர்வு கட்டாயமாம்
ஜோதிட ரீதியாக கிரகங்களுடைய பார்வை மிக முக்கியம். அதில் கோச்சார கிரகங்களுடைய பார்வை மிக மிக முக்கியமானதாக உள்ளது. காரணம் கோச்சார கிரகங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு சில மாற்றங்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில், லக்னாதிபதி அல்லது குருவை கோச்சார சனி பார்க்கின்ற பொழுது ஒருவருக்கு பதவி உயர்வு புதிய உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

ஒருவருர் லக்னாதிபதியை கோச்சார சனி பார்க்கின்ற பொழுது இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சனி பகவான் என்பவர் தொழில் உயர்வு அதிகாரம் ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகம்.
அதனால் சனி பார்வை லக்னாதிபதி மீது விழுகின்ற பொழுது அவர்கள் ஏற்கனவே செய்து வரக்கூடிய பணியில் இருந்து கூடுதல் பொறுப்பு மற்றும் பதிவு உயர்வு பெறுவார்கள். மேலும், சனி கொடுக்கக்கூடிய உயர்வு வெறும் அதிர்ஷ்டத்தால் வருவதே இல்லை.
அவர்கள் ஏற்கனவே உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பொறுப்பும் அங்கீகாரமும் அவர்களுக்கு இந்த காலகட்டங்களில் கிடைக்கும். ஆதலால் பதவி உயர்வு புதிய பொறுப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |