2026: புரட்டாசி பௌர்ணமியில் துவங்கும் முக்கியமான யோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

By Sakthi Raj Sep 26, 2026 12:05 PM GMT
Report

 புரட்டாசி மாதம் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. அதிலும் புரட்டாசியில் வரக்கூடிய பௌர்ணமி திதி என்பது சந்திர பலன் உச்சத்தை அடையும் முக்கியமான காலகட்டமாகும்.

ஜோதிடத்தில் 2026 ஆம் ஆண்டின் புரட்டாசி பௌர்ணமி செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று வருகிறது. இந்த பௌர்ணமியை ஒட்டி சந்திரன் குரு சுக்கிரன் புதன் போன்ற கிரகங்களின் கோச்சார நிலைகளை அடிப்படையாகக் கொண்டு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் திருப்பங்கள் காத்திருக்கிறது. அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: புரட்டாசி பௌர்ணமியில் துவங்கும் முக்கியமான யோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது | 2026 Purattasi Purnima Yoga Brings Good Fortune

2026: அக்டோபர் மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடும் விருச்சிக ராசியினர்

2026: அக்டோபர் மாதம் கடன் தொல்லையிலிருந்து விடுபடும் விருச்சிக ராசியினர்

மிதுனம்:

மிதுன ராசிக்கு புதன் பகவானின் ஆதிக்கம் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டம் புத்திசாலித்தனமான முடிவுகளால் வாழ்க்கையில் நன்மை உண்டாகும். வியாபாரம் தொடர்பாக இவர்கள் முன்னேறிச் செல்வார்கள். இவர்கள் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணம் கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கடகம்:

கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதால் இவர்களுக்கு பௌர்ணமி கால மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இவர்களுக்கு குடும்பம், வீடு, நிலம் வாகனம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

இந்த ஒரு வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் செய்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகும்

இந்த ஒரு வழிபாட்டை புரட்டாசி மாதத்தில் செய்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் விலகும்

கன்னி:

கன்னி ராசிக்கு புதன் பகவானுடைய இந்த ஆதிக்கம் இவர்களுக்கு வியாபாரம் கல்வி தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க கூடிய நிலையை உருவாக்கும். சிலருக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். திடீர் திருப்பம் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US