நவராத்திரி முடியும் முன் நாம் கட்டாயம் செய்யவேண்டியவை
நவராத்திரி என்றாலே அம்மனுக்கு உகந்த விழாவாகும்.உலகம் எங்கிலும் வாழும் இந்து மக்கள் இந்த நவராத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.அப்படியாக பலரும் தங்களின் வீடுகளில் காலம் காலமாக இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வார்கள்.
சிலர் புதிதாக வீட்டில் கொலு வைக்க தொடங்கி இருப்பார்கள்.பெண்கள் மத்தியில் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.ஆனால் சிலருக்கு பல சூழ்நிலையால் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்யமுடியாமல் போகலாம்.
அப்படியாக பலருக்கும் கொலு வைக்கமுடியவில்லை என்று சில ஏக்கம் இருக்கும்.அவர்கள் கண்டிப்பாக கொலு தானம் செய்யலாம். இந்த கொலு தானம் ஆனது நம்முடைய வாழ்க்கையில் நினைத்த காரியத்தை நடக்க உதவி செய்கிறது.இப்பொழுது இந்த கொலு தானம் கொடுப்பதை பற்றி பார்ப்போம்.
நவராத்ரி கொலு பொம்மைகள் பார்க்கவே மிக அழகாய் இருக்கும்.அதை பார்க்கும் பொழுது நம்முடைய வீட்டிலும் கொலு வைக்கவில்லையே என்ற கவலை சிலருக்கு உருவாகலாம்.அவர்கள் நிச்சயமாக தங்களுடைய வாழ்க்கை சூழல் மாற கொலு தானம் செய்யலாம்.
அதாவது வீட்டில் நீண்ட நாள் திருமண தடை,குழந்தை பாக்கியம் தள்ளி போகுதல்,பிள்ளைகள் படிப்பு, கணவனின் ஆரோக்கியம்,பணக்கஷ்டம் இருப்பவர்கள் அம்பிகையை மனதில் நினைத்து தங்களுக்கு பிடித்த கொலு பொம்மை வாங்கி கோவிலுக்கு இல்லை தெரிந்தவர்கள் கொலு வைத்து இருந்தார்கள் என்றால் அவர்களிடம் இந்த கொலுவை தானமாக கொடுக்கலாம்.
மேலும் இந்த கொலுவை கொடுத்து கொலு படிக்கட்டில் வைத்து அதை பார்த்து மனதார ரசித்து வழிபாடு செய்யலாம்.
நன்றாக படிக்க வேண்டும் என்றால் சரஸ்வதி தேவி பொம்மை, பணம் தேவையா குபேரர் பொம்மை, கடன் தீர வேண்டுமா குபேரர் பொம்மை, மன தைரியம் வேண்டுமா சக்தி தேவி, அனுமன், பிரத்தியங்கிரா தேவி, வாராஹி இப்படி உக்கிர தெய்வங்களை வாங்கி வைக்கலாம்.
இவ்வாறு தங்களுக்கு என்ன வேண்டுதலோ அதற்கு ஏற்ப கொலு தானம் செய்ய நிச்சயம் ஒரு வருடத்திற்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டு வாழ்க்கையில் நினைத்தது நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |