யார் வெள்ளி மோதிரம் அணியக்கூடாது?
மனிதனாக பிறந்தவர்களுக்கு கட்டாயம் அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.ஆண் பெண் இருவரும் தங்களை அழகு படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.அதற்கு அவர்கள் மெனக்கிடுவதும் உண்டு.
அப்படியாக அழகுக்கு அணிகலன்கள் அணிவது தாண்டி.அது அவர்கள் அந்தஸ்து என்று கட்டத்தில் நின்றது.பிறகு அது ஜோதிட சாஸ்திர ரீதியாக மாறியது.
ஆம் மனிதன் அவனுடைய வாழ்க்கை கிரகத்துடன் ஒப்பிட்டு நல்ல ஜோதிடரை அணுகி அவர்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிய தொடங்கினார்கள்.அதில் யார் யாருக்கு எது சாத்தியமோ அதை வாங்கி அணிந்து தங்களை அழகு படுத்துக்கொண்டும் கிரக பாதிப்புகளில் இருந்து காத்துகொண்டு இருந்தனர்.
அந்த வகையில் அழகு ரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் எல்லோரும் வாங்கி அணியக்கூடிய அணிகலன்களாக வெள்ளி அமையப்பெற்று இருக்கிறது.வெள்ளி அணிந்து கொண்டால் பார்ப்பதற்கு அழகாவும் இருக்கும் ஜோதிட ரீதியாக அதிக நன்மைகளும் அளிக்கிறது.
வெள்ளி என்று எடுத்து கொண்டால் பெரும்பாலான மக்கள் மோதிரம் வாங்கி அணிவதை தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இந்த வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுக்கு வாழ்க்கைக்கு நிறைய மாற்றங்கள் உருவாகிறது.
மேலும் அதை வாங்கியதோடு மட்டும் அல்லாமல் அதை அணியும் முறையும் இருக்கிறது.ஆனால் ஒருவர் அணியவேண்டும் என்று முடிவு எடுத்து வீட்டால் கண்டிப்பாக கட்டை விரலில் தான் அணியவேண்டும். ஆண்கள் வெள்ளி மோதிரத்தை வலது கையிலும் பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அணிந்து கொள்வதால் குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.மேலும், வெள்ளி மோதிரம் அணிவதால் நம் ராசியில் இருக்கும் சூரியன் வலுப்பெறுகிறது.
மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் வெள்ளி மோதிரம் கட்டாயம் அணியலாம் .
ஆனால் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தவறுதலாக கூட வெள்ளி மோதிரம் அணியக்கூடாது அது அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |