கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரம்
By Sakthi Raj
கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்போம்.அப்படியாக அன்றைய நாளில் வீடுகளில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகள் செய்து வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபாடு செய்வதுண்டு.
அப்படியாக அன்றைய நாளில் நாம் பூஜை ஓடு சேர்ந்து கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து செல்வமும் நம் வீட்டை வந்து சேரும் என்பது ஐதீகம்.
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.
ராதாவிற்கான காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.
இதை உச்சரித்து கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம். மேலும் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்து “ஸர்வம் க்ருஷணார்ப்பனம்” என்ற உச்சரித்து, கிருஷ்ணா எழுந்தருளி தன்னுடைய அலங்காரம், பூஜை, வழிபாட்டை ஏற்றுக் கொள்வாயாக என வேண்டி கொள்ளவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |