கணவன் மனைவி உறவில் இனி விரிசல் இல்லை: குபேர மூலை செய்யும் அற்புதம்
பொதுவாக மனித வாழ்க்கையில் திருமணம் முக்கிய பங்காற்றுகிறது.
இதன்படி, பஞ்சபூதங்களில் ஒன்றான "நிலம்" மனிதன் வாழ்க்கையின் இருப்பிடமாக பார்க்கப்படுகின்றது.
இதனை வாஸ்துப்படி தென்மேற்கு மூலையுடன் ஒப்பிட்டு கூறகிறார்கள். இந்த மூலையை "நைருதி மூலை/குபேர மூலை" என்றும் அழைப்பார்கள்.
வீட்டின் தென்மேற்கு மூலை, ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகின்றது. இந்த மூலையில் வீட்டின் அல்லது கட்டிடத்தின் திறப்பு, வாசல் வைக்கக் கூடாது.
அந்த வகையில், குபேர மூலையில் வேறு என்னென்ன விடயங்களை மறந்தும் செய்யக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
குபேர மூலை
1. அலுமாரியை தவறான மூலையில் வைத்திருப்பதால் பணம் சேருவது குறைவாக இருக்கும்.
2. தென்மேற்கு மூலையில் சமையலறை அமைக்கக் கூடாது. இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் முடிந்தவறை குடியேறாமல் இருப்பது நல்லது.
3. சில வீடுகளில் குபேர மூலையில் கழிவறைகள் அமைத்திருப்பார்கள். இப்படியான வீடுகளிலும் குடியேறுவதை தவிர்க்கவும். வாஸ்து சரியாக அமையாவிட்டால் வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே முக்கிய காரணமாக இருக்கும்.
4. பூமி, சூரியனை சுற்றும் பொழுது அதன் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் இருக்கும்.
அதாவது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் இருக்கும். இதனால் தென்மேற்கு மூலையில் படுக்கையறை வைப்பது குடும்பத்திற்கும் கணவன் - மனைவிக்கும் நல்லது.
5. பொதுவாக வீடுகளில் நேர்மறையான ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சில வாஸ்து குறிப்புக்களை பின்பற்றல் அவசியம். அதில் ஒன்று தான் குபேர மூலையில் பணப்பெட்டிகள், சேமிப்பு பொருட்களை வைப்பது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |