இந்த முறையில் குபேரனை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்
செல்வத்தின் அதிபதி குபேரர். ஒருவருடைய வீட்டில் செல்வம் குறைந்து விட்டால் உடனே குபேரனை வழிப்படுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொன் மற்றும் பொரு என அனைத்து செல்வத்தையும் வாரி வழங்கக்கூடிய ஒரே கடவுளதக குபேரனை வியாழக்கிழமையில் வழிப்படு நல்லதாகும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
குபேரன் வழிபாடு
செல்வம் பெருகுவது முந்தைய நல்ல கர்மங்களின் விளைபொருளாகும்.
அதனால்தான் சில தனிநபர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள், மற்றவர்கள் வறுமையில் உள்ளனர்.
குபேர பகவான் பணம், வெற்றி மற்றும் பெருமை ஆகியவற்றின் உண்மையான உருவகமாக இருக்கிறார். இவர் செல்வங்களின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.
குபேரனின் மந்திரத்தை தினமும் 108 முறை மூன்று மாதங்களுக்கு உச்சரிப்பது குபேர் கடவுளை திருப்திப்படுத்தவும் அவரது ஆசீர்வாதத்தைப் பெறவும் வழிவகுகின்றது.
குபேர மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம்
ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாயயக்ஷ ராஜாய
தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய
ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!
மந்திரத்தை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள்
வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும். மன மற்றும் ஆன்மீக அமைதியை தரும். கடனில் இருந்து ஒருவரை மீட்டெடுக்கும். அறிவு, செறிவு மற்றும் வணிக உணர்வை வழங்கும். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். நோய் நொடிகள் தீரும்.
எப்படி வழிபட வேண்டும்?
வியாழக்கிழைமையன்று அதிகாலையில் நீராடி, பச்சரிசி கோலம் போட வேண்டும். பின் நிலைவாசலில் சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
அடுத்தாக பூஜையறையில் குபேரனுக்கு தாமரை மலர் மற்றும் சங்கு வைத்து விளக்கேற்றி வழிப்பட வேண்டும்.
இந்த பூஜையில் கட்டாயம் நெல்லிப்பழத்தை வைத்து வழிப்படுவது அவசியமாகும். நைவேத்தியமாக அவலுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து படைக்கலாம்.