வேண்டிய வரம் தரும் மல்லிகைப்பூ
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்று தனியாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கும்.
நம்முடைய குலத்தைக் காக்கும் தெய்வத்தை குலதெய்வம் என்றும், நமக்கு விருப்பமான தெய்வத்தை இஷ்ட தெய்வம் என்றும், நம் வீட்டிற்கு உகந்த தெய்வத்தை வீட்டு தெய்வம் என்றும் கூறுவோம்.
இந்த தெய்வங்களை நாம் அனுதினமும் முறையாக பூஜிக்க வேண்டும். இப்படி பூஜிக்கும் பொழுது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த நன்மைகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு காரியத்தை நாம் செய்ய நினைக்கிறோம், அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு விட்டது, அல்லது அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும், இப்படி ஏதாவது ஒரு கோரிக்கை நம்முடைய மனதில் இருக்கும்.
அந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக நம்முடைய குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ இத்தனை நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து வரங்களை கேட்போம்.
இப்படி நாம் வழிபாடு செய்து வரங்களை கேட்கும் பொழுது அந்த வழிபாட்டில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் கண்டிப்பான முறையில் நாம் வேண்டிய வரத்தை நம்முடைய குல தெய்வமும் இஷ்ட தெய்வமோ நமக்கு அருள் புரிவார்கள்.
எப்பொழுதும் போல் உங்களுடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் எப்படி வழிபாடு செய்வீர்களோ அதே போல் வழிபாடு செய்யுங்கள்.
வழிபாடு அனைத்தும் செய்து முடித்த பிறகு ஒரே ஒரு மல்லிகை பூவை உங்களுடைய வலது கையில் எடுத்துக்கொண்டு அதற்கு கீழே இடது கையை வைத்துக்கொண்டு இதை அப்படியே உங்கள் நெஞ்சுக்குழியின் முன்பாக வைத்து நீங்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் நாமத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.
இப்படி உச்சரித்து விட்டு அந்த மல்லிகை பூவை அந்த தெய்வத்தின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் வழிபாட்டை நிறைவு செய்யும் பொழுது இந்த முறையில் மல்லிகை பூவை சமர்ப்பணம் செய்தீர்கள் என்றால் நீங்கள் என்ன வேண்டுதல் வைத்த அந்த வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும்.
மல்லிகைப்பூ என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த பூ என்பதால் எல்லா தெய்வத்திற்கும் நாம் சமர்ப்பிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி வீட்டிற்கு வர பரிகாரம் மிகவும் எளிமையான இந்த தாந்திரீகத்தை உங்களுடைய வழிபாட்டில் மேற்கொண்டு நீங்கள் நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க இறைவனின் அருளை பெறுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |