குலதெய்வம் கோபம் தணிய 200 வருடத்திற்கு முன் சொன்ன பரிகாரம்
குலதெய்வம் ஒவ்வொரு குடும்பங்களுடைய அடையாளம்.அதாவது அந்த குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம்.அப்படியாக சில குடும்பங்களுக்கு குலதெய்வத்தின் சாபம் உண்டாகுவதையும் குலதெய்வம் அவர்கள் மீது கோபம் கொண்டு இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
அவ்வாறு குலதெய்வத்தால் கோபம் ஏற்பட்ட குடும்பங்களில் தீர்க்க முடியாத சில பிரச்சனைகள் உருவாகி கொண்டு இருக்கும்.அப்படியாக அவ்வாறு ஏற்பட்ட குலதெய்வத்தின் கோபத்தை எவ்வாறு போக்குவது?அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த கோபத்தை போக்கும் பரிகாரம் ஆனது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லப்பட்ட பரிகாரம்.இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்.
அடுத்ததாக நம்முடைய வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு, அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு அதில் வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் . பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும்.இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.இந்த பரிகாரம் செய்யத்தொடங்கிய பொழுதே பல மாற்றங்களை உணரமுடியும்.
மேலும் பரிகாரம் செய்து முடிக்கும் முடிவில் இன்னும் நிறைய மாற்றங்களை நம்மால் உணர முடியும்.ஆக எல்லாவற்றிக்கும் உலகத்தில் தீர்வும் முடிவும் ஒன்று உள்ளது.
ஆக எதற்கும் மனம் வருந்தாமல் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நாம் மனதார வழிபட வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |