வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Aug 24, 2026 12:18 PM GMT
Report

 ஒவ்வொரு மனிதருக்கும் குலதெய்வத்தினுடைய அருள் இருந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து நிலைக்கு சென்றுவிடலாம்.

அந்த நிலையில், ஒருவருக்கு குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒரு சில பரிகாரங்களை மேற்கொள்கின்ற பொழுது குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெறலாம். அந்த பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

நம் குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபாடு செய்கின்ற பொழுது தடைகள் யாவும் நீங்கும். புதிய தொடக்கம் சிறப்பாக அமையும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் | Kula Deivam Parigarangal For Happy Life

180 கோவில்களில் ஒரே நாளில் 1200 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் திணறிய பக்தர்கள்

180 கோவில்களில் ஒரே நாளில் 1200 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் திணறிய பக்தர்கள்

குலதெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது பண வரவு அதிகரிக்கு. நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

நாம் தயிர் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது வீடுகளில் அமைதி உண்டாகும். சண்டை சச்சரவுகள் நீங்கும்.

எலுமிச்சை பழம் படைத்து நாம் குலதெய்வத்தை வழிபாடு செய்கின்ற பொழுது கெட்ட சக்திகள் யாவும் நீங்கும். கண் திருஷ்டிகள் நம்மை நெருங்காது.

குலதெய்வத்திற்கு பூமாலை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் நினைத்த காரியம் நடக்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் | Kula Deivam Parigarangal For Happy Life

12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்?

12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்?

குலதெய்வத்திற்கு மஞ்சள் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது திருமணத்தடை யாவும் விலகும்.

மங்கள காரியங்கள் நடக்கும். குலதெய்வத்திற்கு பால் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குலதெய்வத்திற்கு வெற்றிலை பாக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது செல்வ வளம் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

குலதெய்வத்திற்கு குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பப் பெண்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். தடைபட்ட திருமண வாழ்க்கை மீண்டும் வெற்றி பெறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US