குல தெய்வம் சாபத்தில் இருந்து நீங்க நாம் என்ன செய்யவேண்டும்?

By Sakthi Raj Aug 18, 2024 11:42 AM GMT
Report

 நமக்கு பல தெய்வங்கள் விருப்ப தெய்வங்களாக இருக்கலாம்.ஆனால் அவர்களின் அருளை காட்டிலும் குல தெய்வம் அருள் தான் மிக முக்கியமானது.குல தெய்வம் அருள் இருந்தால் தான் வீட்டிலும் வாழ்க்கையிலும் சுபிட்சம் உண்டாகும்.

சிலருக்கு குல தெய்வத்தின் சாபம் இருக்கும் அதனால் அவர்களுக்கு வீட்டில் பல துன்பங்கள் மாறி மாறி வரும்.இப்பொழுது குல தெய்வம் அருள் கிடைக்க சாபம் நீங்க நாம் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

குலதெய்வ சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஒரு தீபத்தை வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வைத்து “நாங்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

குல தெய்வம் சாபத்தில் இருந்து நீங்க நாம் என்ன செய்யவேண்டும்? | Kula Deivam Sabam Neenga Valipaadu

குலதெய்வம் தெரியாது என்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு “எங்கள் குலதெய்வத்தை விரைவிலேயே எங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த பூஜையை மேற்கொள்ள சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்.வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த கூடாது. பஞ்சு திரியை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் நீங்கள் காயத்ரி மந்திரம் சொல்வதால் நமக்கு நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா?

தினமும் நீங்கள் காயத்ரி மந்திரம் சொல்வதால் நமக்கு நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா?


அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.பிறகு அந்த எண்ணெயில் ஒரு சொட்டுத் தேன், மூன்று மிளகை போட வேண்டும்.

இப்படி போட்ட பிறகு இந்த தீபத்தை பார்த்து உங்களுடைய வேண்டுதலை நீங்கள் வைக்க வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் ஏற்றும் தீபங்கள் அப்படியே இருக்கட்டும்.

கூடுதலாக ஒரு தீபத்தை குல தெய்வத்தின் நினைத்து ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 41 நாட்கள் நீங்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உங்களுக்கு குலதெய்வத்தால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.

என்னதான் துன்பம் வந்து துவண்டு போனாலும் குல தெய்வம் தான் அருள் இருந்தால் எல்லாம் மாரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US