ஒரே குலதெய்வம் கொண்ட ஆண் பெண் திருமணம் செய்து கொள்ளலாமா?
ஒரு மனிதனை அவன் தாய் தந்தை முன்னோர்கள் அடுத்து அவனை காப்பது குலதெய்வம் தான்.குலதெய்வம் அருள் இருந்தால் அவன் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் கடந்து விடலாம்.அப்படியாக ஒரு ஆணுக்கு குலதெய்வம் ஆனது அவன் வாழ்நாள்முழுவதும் ஒரே தெய்வமாக இருக்கிறது.
ஆனால் பெண்களுக்கு அவர் திருமணம் ஆகும் முன் ஒரு குலதெய்வமும் திருமணம் ஆன பிறகு கணவன் வீட்டு குலதெய்வம் என்று மாறிவிடுகிறது.அப்படியாக பெரும்பாலும் ஒரே குலதெய்வம் கோயில் கொண்ட ஆண் பெண் திருமணம் செய்து கொள்ளலாமா?
பெண்கள் அவர்கள் திருமண ஆன நாள் முதல் கணவன் வீட்டார் குலதெய்வத்தை வழிபாடு செய்ய தொடங்குகின்றனர்.இன்னும் சிலர் தாய் வீட்டு குலதெய்வத்தை மறந்தும் விடுகின்றனர்.அவ்வாறு செய்வது தவறு.கெட்ட காலங்களில் கணவன் வீட்டு குலதெய்வம் நம்மை காக்க முடியவில்லை என்றாலும் நிச்சயம் பெண் வீட்டு குலதெய்வம் அவர்களை காப்பாற்றும்.
ஆக நாம் மறக்காமல் தாய் வழி குலதெய்வம் வழிபாடு செய்யவேண்டும்.ஒரு ஆணானவர், தன் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய தன் ஆயுள் விருத்தி அடையும் என்று பலருக்கும் தெரியவில்லை, காரணம் என்னவெனில் நான்காம் இடம் தாய் ஸ்தானம் ஆகும்.
இந்த நான்காம் இடத்திற்கு ஐந்தாம் இடமே எட்டாம் இடமாகும், ஒரு ஆணிற்கு மாறாக தசா புத்தி நடக்கிறது. கண்டங்கள் வருகிறது என்றால் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய அனைத்து கண்டங்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
அதே போல் ஒரு ஆணானவர், தன் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய தன் ஆயுள் விருத்தி அடையும் என்று பலருக்கும் தெரியவில்லை, காரணம் என்னவெனில் நான்காம் இடம் தாய் ஸ்தானம் ஆகும். இந்த நான்காம் இடத்திற்கு ஐந்தாம் இடமே எட்டாம் இடமாகும், ஒரு ஆணிற்கு மாறாக தசா புத்தி நடக்கிறது.
கண்டங்கள் வருகிறது என்றால் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய அனைத்து கண்டங்களிலிருந்தும் தப்பிக்கலாம்.அதே போல் ஒரு பெண்ணானால் தன் தாயின் குலதெய்வத்தை வழிபாடு செய்ய தீர்க்க சுமங்கலியாகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவும் போற்றப்படுவாள்.
மேலும் பெண் கொடுத்து எடுப்பதில் குலதெய்வத்திற்கான உறவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது சிறப்பானதாகும் வாழ்க்கை வளமையானதாக்கும்.ஒரே குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் அண்ணன் தங்கை முறையாக இது அதர்மம் ஆகும்.
ஆக அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த பெண் வருடத்தில் ஒரு முறையாவது அவள் தாய் வழி தந்தை வழி குலதெய்வத்தை வழிபாடு செய்ய வீட்டில் உருவாக உள்ள எல்லா பிரச்சனைகளும் விலகி மனம் தெளிவடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |