குலம் காக்கும் குல தெய்வ வழிபாடுகள்
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு குல தெய்வங்கள் இருக்கும்.அப்படியாக அவர்களுடைய குடும்பத்தை காப்பது அந்த குலதெய்வமாக இருக்கிறது என்று நம்புகின்றோம்.
ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வ வழிபாடுகளை சரியாக கடைபிடிக்கவேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால் குடும்பத்தில் நிறைய தடங்கல்களும் சங்கடங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நாம் செய்யும் காரியங்கள் சிறப்பாக அமைய நிச்சயமாக குலதெய்வ அருள் இருந்தால் மட்டுமே அமையும். குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்களைப் போல். நம் முன்னோர்களை எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக வைத்திருக்கின்றோமோ,அதே போல் நம்முடைய குல தெய்வங்களையும் நாம் மரியாதை செலுத்தி வழிபாடு செய்வதால் மட்டுமே நம்முடைய குலம் செழிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக உண்மையாக இருந்து வருகிறது.
அப்படியாக, காலம் காலமாக ஒருவருடைய குலதெய்வ வழிபாட்டை தவறவிட்டால் அவர்களுக்கு நடக்கும் துன்பங்களையும் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் இந்த காணொளியில் விரிவாக பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |