லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் மிகுந்த சுயமரியாதையோடு வாழ்வார்களாம்

By Sakthi Raj Jul 19, 2026 01:00 PM GMT
Report

ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் அவர்களுடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் கணித்து விடலாம்.

அந்த வகையில், ஒருவருடைய லக்னாதிபதி பத்தாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அந்த ஜாதகர் எந்த நிலையில் யாரையும் எதிர்பார்த்து நிற்க மாட்டார் "தன் கையே தனக்கு உதவி" என்று வாழக் கூடியவர்.

மிகவும் வைராக்கியமான குணம் இருக்கும். சுயமரியாதையோடு வாழக்கூடியவர்கள். மேலும் பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் என்பதால் தொழில், உழைப்பு, வாழ்க்கை உயர்வு ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. இந்த இடத்தில் லக்னாதிபதி அமர்கின்ற பொழுது ஜாதகர் ஒருவரை எதிர்பார்த்து வாழ விரும்ப மாட்டார்.

லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் மிகுந்த சுயமரியாதையோடு வாழ்வார்களாம் | Laknapathy In 10 Place Astrology Prediction

12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?

12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?

இவர் எப்பொழுதும் தன்னுடைய உழைப்பாலே உயர வேண்டும் என்று எண்ணக் கூடியவர். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் இவர்கள் கைநீட்டி ஒருவரிடம் உதவி கேட்பதை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உழைத்து பணத்தை சம்பாதித்து விடலாம் என்கின்ற ஒரு நம்பிக்கை இவர்களிடத்தில் இருக்கும்.

இவர்கள் சுகமான வாழ்க்கையை விட சுயமரியாதை ஆன வாழ்க்கையை தான் அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் உழைப்பை வெறும் தொழிலாக மட்டும் பார்ப்பதில்லை. அவர்கள் ஒரு வாழ்க்கையின் ஒழுக்கமாக கருதுகிறார்கள்.

லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் மிகுந்த சுயமரியாதையோடு வாழ்வார்களாம் | Laknapathy In 10 Place Astrology Prediction

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

அதேபோல், எந்த வேலையையும் அவர்கள் சிறியதாக நினைக்க மாட்டார்கள் உழைத்து உண்பதே உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணத்தோடு செயல்பட கூடியவர்கள். அதிலும் குறிப்பாக சனி பகவானுடைய பார்வை கிடைத்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

வருமானம் குறைவாக இருந்தாலும் உழைத்து சம்பாதித்த அந்த மன திருப்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கையை விட மன நிறைவான வாழ்க்கையை தான் விரும்புகிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US