லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள எட்டு நரசிம்ம தலங்களில் ஒன்று.
இங்கே பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது.
இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி என்னும் தலத்தில், புதுச்சேரி பகுதியான அபிஷேகப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது.
கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார்.
இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது.
இந்த திருக்கோவிலின் 2024 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடி கொண்டு வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மலர்களால் அலங்கரித்து சங்கல்பம் செய்து மகா தீபாராதனை கான்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிந்தா, நாராயணா என பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் பல்லக்கில் வைத்து வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 22-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |