நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

By Sakthi Raj Nov 28, 2026 05:07 AM GMT
Report

ஆன்மீக வழிபாடுகளில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், லலிதா சகஸ்ர நாமத்தில் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்களையும் அதிலும் குறிப்பாக ஒருவர் சந்திக்க கூடிய சட்ட போராட்டங்களையும் மன சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடிய நேரங்களில் "லலிதா சகஸ்ரநாமம்" நமக்கு எவ்வளவு துணையாக இருக்கும் என்பதை பற்றி நம்மோடு விளக்குகிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிரசாத் அவர்கள்.

ஒருவர் பல ஆண்டு காலங்களாக சட்ட சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வழக்குகளில் வெற்றி பெறவும் எதிரிகளை தைரியமாக எதிர்கொள்ளவும், அம்பிகையின் உக்கிரமான வடிவமாக இருக்கக்கூடிய பைரவி மற்றும் பகவதி நாமங்களை வழிபாடு செய்வது அவர்களுக்கு நல்ல பலன் உள்ளதாக அமையும்.

நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு | Lalitha Sahasranamam And The Benefits Of Chanting

2026: வைகுண்ட ஏகாதசி எப்போது? பெருமாளின் அருளைப் பெற இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்

2026: வைகுண்ட ஏகாதசி எப்போது? பெருமாளின் அருளைப் பெற இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்

அதேபோல், நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையவும் தசமி திதி மாலை நேரங்களில் விஜயா எனும் நாமத்தை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்கிறார். மேலும், மனிதர்களுடைய எதிரிகள் பல நேரங்களில் வெளியே இருப்பதில்லை.

உள்ளுக்குள் தான் இருக்கிறார்கள். அப்படியாக மனிதர்கள் உள்ளே இருக்கக்கூடிய ஆணவம், கோபம், பொறாமை போன்ற தீய குணங்களில் இருந்து வெளியேற மற்றும் மனதை தூய்மைப்படுத்துவதற்கும் "பக்தமானச ஹம்சிகா" என்ற நாமத்தின் முக்கியத்துவத்தை அவர் நமக்கு வலியுறுத்துகிறார்.

அதேபோல், எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மார்த்தாண்ட பைரவர், வாராகி மற்றும் பிரத்யங்கிராதேவியின் வழிபாடு சிறப்பு என்றும், மேலும் ஒருவர் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பல்வேறு முக்கியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அதைப்பற்றி இந்த காணொளி பார்த்துத் தெரிந்து கொள்வோம்.  

Disclaimer:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US